மேரேஜுக்கு முன்னாடி உதய் பண்ணிய சத்தியத்த இப்ப மீறிட்டாரு... கிருத்திகா கலகல பேச்சு

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தற்சமயம் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக நடிகர் கமல் ஹாசன் அவர்களின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதே போல கிருத்திகா உதயநிதி அவர்கள் 'பேப்பர் ராக்கெட்' என்கிற வெப் சீரீஸை இயக்கியுள்ளார். இது நேற்று இணையத்தில் வெளியானது.

கல்லூரியில் அறிமுகம்

கல்லூரியில் அறிமுகம்

உதயநிதி அவர்களும் கிருத்திகா உதயநிதி அவர்களும் லயோலா கல்லூரியில் தான் ஒன்றாக படித்தார்கள். நடிகர் விஷாலும் இவர்களுடைய கிளாஸ்மேட். கல்லூரியில் படிக்கும்போதே கிருத்திகாவை காதலிக்க தொடங்கி விட்டாராம் உதயநிதி. அவரை அடிக்கடி பின் தொடரவும் செய்துள்ளாராம். ஒரு முறை கிருத்திகா பரத நாட்டியம் அரங்கேற்றிய போது அங்கு உதயநிதி சென்றுள்ளார். அவரை பார்த்ததும் தடுமாறி விட்டாராம் கிருத்திகா. பின்னர் உதயநிதி புரபோஸ் செய்த போது கிருத்திகா மறுத்துவிட்டாராம்.

காரணம்

காரணம்

உதயநிதியின் காதலை ஏற்க மறுத்ததற்கு காரணமாய் அரசியல் பின்னணியைத்தான் கூறியுள்ளார். அரசியலுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதால், அப்படிப்பட்ட சூழ்நிலை உள்ள குடும்பத்தில் தன்னால் வந்து வாழ முடியுமா முடியாதா என்கிற சந்தேகத்தில் கிருத்திகா முதலில் உதயநிதி புரபோசலை மறுத்துள்ளார். ஆனால் எப்போதும் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்கும் உதயநிதியை பார்த்து நீண்ட நாள் தன்னால் அவரை நிராகரிக்க முடியவில்லை எனவும், அரசியலுக்குள் போக மாட்டேன் என்ற சத்தியம் செய்தால்தான் நான் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்ற வாக்குறுதியுடன் உதயநிதியின் காதலை ஏற்றுள்ளார் கிருத்திகா.

நடிகர் அவதாரம்

நடிகர் அவதாரம்

உதயநிதி அவர்கள் முதன்முறையாக சினிமா துறையில் நுழைந்தபோது ஒரு தயாரிப்பாளராகத்தான் வந்தார். விஜய்யின் தீவிர விசிறியானவர் அவரை வைத்தே தன்னுடைய முதல் படத்தை தயாரித்திருந்தார். அதன் பின்னர் திரைப்பட விநியோகத்திலும் இறங்கிய உதயநிதி ஒரு கட்டத்தில் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தாராம். கிருத்திகாவிடம் அதனை கூறிய போது ஏன் திடீரென்று நடிக்கச் செல்கிறாய் என்று கிருத்திகா கேட்க, அரசியல்வாதியாக மாட்டேன் என்றுதான் சத்தியம் செய்துள்ளேன். நடிகராக மாட்டேன் என்று சத்தியம் செய்யவில்லை என்று கூறி நடிப்பதற்கு சம்மதம் வாங்கினாராம்.

உடைந்த சத்தியம்

உடைந்த சத்தியம்

தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த உதயநிதி தன்னை மெல்ல மெல்ல அரசியலிலும் ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ள நிலையில் தன்னிடம் செய்த சத்தியத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து இப்போது முழு அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்று கிருத்திகா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X