மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படம் … சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு !
சென்னை : தடம் வெற்றிக்குப்பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் 70 சதவிகிதம் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் கலையரசன், ஆரவ் லீட் ரோலில் நடிக்க உள்ளனர்.

வித்தியாசமாக
தமிழ் சினிமாவில் தனெக்கென தனி பாணியை கடைப்பிடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இயக்குநர் செல்வராகவன், கெளதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்ததாலேயே இவரது கதைகளும் வித்யாசமானதாக உள்ளன.

மிகப்பெரிய வெற்றி
தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களை இயக்கியவர் மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். மீகாமன் திரைப்படம் கேங்ஸ்டார் மற்றும் ஆக்ஷன் திரைப்படமாக அமைந்தது இப்படத்தில் ஆர்யா அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் வெளியான ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

நிதி அகர்வால்
இவர் அடுத்ததாக எப்போது படத்தை இயக்குவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கலையரசன், பிக் பாஸ் ஆரவ் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு ஏற்கனேவே முடிவடைந்து விட்ட நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











