கவினின் ஸ்டார்.. படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம் சொன்ன பிரபலம்

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்திருக்கிறார் கவின். படமானது மே 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கவினின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. அதன் காரணமாக ரசிகர்கள் கவினுக்கு தங்களது பாராட்டை பலமாகவே கொடுத்துவருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

Udhayanidhi Stalin Gave First Review For Kavins Star Movie


டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

திருமணம்: இதற்கிடையே பிக்பாஸில் கலந்துகொண்டபோது சக போட்டியாளரான லாஸ்லியாவை அவர் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அதுகுறித்து இரண்டு பேரும் மௌனமே காத்து வந்தனர். இந்தச் சூழலில் கவினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. மோனிகா டேவிட் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணத்தில் நெல்சன் திலீப்குமார், விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஸ்டார்: இந்த சூழலில் கவின் ஸ்டார் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கியிருக்கிறார். இதில் கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒரு நடுத்தர இளைஞன் பெரிய ஹீரோவாக மாறுவது பற்றி படம் உருவாகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. முக்கியமாக கவினின் நடிப்பு அட்டகாசமாக இருப்பதாகவும் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கூறுகிறார்கள்.

முதல் விமர்சனம்: ஸ்டார் படமானது மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நிச்சயம் இந்தப் படம் கவினுக்கு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பார்த்திருக்கிறார். இந்நிலையில் படத்தை உதயநிதி ஸ்டாலின் பார்த்திருக்கிறார். படத்தை பார்த்த அவர், படம் அருமையாக வந்திருக்கிறது. கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X