கொடிய வைரஸில் இருந்து தப்பிக்க… தடுப்பூசி போட்டுக்கொள்வதே ஒரே வழி… உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்!
சென்னை : உதயநிதி ஸ்டாலின் முதல் டோஸ் தடுப்பூசிப் போட்டுக்கொண்டார்.
கொரோனா எனும் கொடிய வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும் தடுப்பூசி போட்டுக்கொள்வதே என்றார்.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதிக உயிரிழப்பு
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயருகிறது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றன. கடந்த வருடம் இல்லாத அளவுக்கு தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதற்கு உருமாறிய கொரோனா வைரஸும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

படிப்படியாக குறையும்
இரண்டாம் அலையில் ஒரு நாளைக்கு 4 இலட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா இரண்டாம் அலை குறைய ஜூலை மாதம் ஆகும் எனவும் படிப்படியாகத்தான் குறைய தொடங்கும் என கூறப்படுகிறது. கொடிய கொரோனா வைரஸிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பதை இளம் நடிகர் வலியுறுத்தி வருகின்றனர். பல நடிகர், நடிகைகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வலியுறுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
உதயநிதி, தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். "தடுப்பூசி எடுப்பதே கொடிய வைரஸிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி என்றார். கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் நான் இன்று எடுத்துள்ளேன். அனைவரும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சண்டையில் நாங்கள் வெற்றி பெறுவோம். முகமூடி அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள், சமூக இடைவெளியை கடைபிடிங்கள் என்று கூறியுள்ளார்.
Recommended Video

வெகுவாக பாராட்டு
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்.ஏவாகி உள்ளார் உதயநிதி ஸ்டாலின். பதவியேற்ற அன்றே தொகுதிக்கு நேரடியாக சென்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவரின் இந்த செயல் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











