Udhayanidhi Stalin - மாரி செல்வராஜ் - சந்தோஷ் நாராயணன் கூட்டணியை உடைத்த உதயநிதி.. காரணம் உள்ளே

சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) மாமன்னன் படத்தில் சந்தோஷ் நாராயணன் ஏன் இல்லை என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. காதலையும், அதன் ஊடாக நடக்கும் சாதிய அட்டூழியங்களையும் பொட்டில் அடித்தாற்போல் படம் பேசியிருந்தது. தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த படங்களில் ஒன்றாகவும் அந்தப் படத்தை ரசிகர்கள் கருதுகின்றனர்.

https://tamil.mykhel.com/cricket/2-left-hand-batsmen-need-for-the-top-6-batting-line-for-india-in-the-world-cup-2023-says-ravi-shastr-038750.html

மாரியின் கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்த அடர்த்தியும், நேர்மையும் இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் ரசிகர்கள் சிலர் முன் வைத்தனர்.

மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்று மாரி செல்வராஜ் ஒவ்வொரு பேட்டியிலும் தெரிவித்துவந்தார்.

கவனம் ஈர்த்த சிங்கிள்கள்: எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் இசையமைப்பார் என்ற பிம்பம் மாமன்னன் படத்தின் மூலம் உடைந்திருக்கிறது. படத்தில் இடம்பெற்ற மலையிலதான் தீ பிடிக்குது ராசா பாடலும், ஜிகு ஜிகு ரயில் பாடலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மலையிலதான் பாடலை வடிவேலு அட்டகாசமாக பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

ட்ரெய்லர்: படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு நடந்த சூழலில் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் மாரி செல்வராஜ் கூறியது போலவே மாமன்னனில் வழக்கமான வடிவேலு இருக்கமாட்டார் என்பது உறுதியாவதாக கூறிவருகின்றனர். மேலும் படம் ரொம்பவே அடர்த்தியான கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பதையும் மாமன்னன் ட்ரெய்லர் உணர்த்துவதாகவும் தெரிவித்தனர்.

உதயநிதி பேட்டி: இந்நிலையில் மாமன்னன் பட ப்ரோமோஷனை ஒட்டி உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டியில், "மாமன்னனுக்கு மாரி செல்வராஜ் சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என்று கேட்டார். நானோ இல்லை இது என் கடைசி படம். நான் சந்தோஷ் நாராயணன் உடன் பணி புரிந்திருக்கிறேன். ஏ.ஆர்.ரஹ்மானோடு பணியாற்ற வேண்டும் என்பது ஆசை என்றேன். அதனையடுத்து கொரோனா லாக்டவுன்போது ஜூம் மீட்டிங்கில் நான் மாரி செல்வராஜ், ரஹ்மான் முதல் முறையா பேசிக்கிட்டோம். அப்போது அவர் ஏ.ஆர்.ரஹ்மான் துபாயில் இருந்தார்.

கடைசி படம்: அனைவரிடமும் இது என் கடைசி படம் என்று சொல்லி சொல்லி படத்துக்குள் அழைத்து வந்தேன். அதேபோலதான் கீர்த்தி சுரேஷ். நான் இதுவரைக்கும் பெரிய ஹீரோயின் கூட படம் நடித்தது இல்லை. வளர்ந்து வரும் நடிகைகளை வெச்சுதான் படம் பண்ணிருக்கேன். ஏன்னா நான் ரொம்ப நாள் வேலை வாங்குவேன் டேட் தேவைப்படும் என்றார் மாரி செல்வராஜ்.

எனக்கும் கீர்த்திக்கும் நல்ல நட்பு இருக்கு.. ரொம்ப நாளா ஒரு படம் பண்ண வேண்டுமென்று நினைத்தோம். இந்த படம் எனது கடைசி படம் என்று சொன்னேன். கீர்த்தி உடனடியாக ஒத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி மாரி செல்வராஜ் படமா என்று கேட்டு அவரும் உள்ளே வந்தார். இவ்வளவு பெரிய நடிகர்கள் இருக்கும்போது நான் எப்படி இந்த கதைக்குள்ள‌ வர போறேன்னு நினைச்சேன். ஆனால் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் மாரி செல்வராஜ் முக்கியத்துவம் கொடுப்பார் என்ற நம்பிககி இருந்தது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X