Udhayanidhi Vs Vijay - எனக்கும் விஜய்க்கும் பிரச்சனை இதனால்தான் வந்தது.. உண்மையை உடைத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) தனக்கும் விஜய்க்கும் என்ன பிரச்னை வந்தது என்பது குறித்து உ தயாநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
விநியோகஸ்தராக இருந்து பிறகு தயாரிப்பாளராக மாறியவர் உதயநிதி ஸ்டாலின். முதன்முறையாக தரணி இயக்கத்தில் விஜய்யை வைத்து குருவி என்ற படத்தை தயாரிட்தார். கடந்த 2008ஆம் வருடம் வெளியான அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.இருப்பினும் அவர் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். சூழல் இப்படி இருக்க சூர்யாவை வைத்து அவர் இயக்கிய ஆதவன் படத்தில் முதன்முறையாக சில நிமிடங்கள் நடித்தார்.

ஹீரோ: அதனையடுத்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சந்தானம், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓரளவு டீசண்ட்டான வரவேற்பை பெற்றது.இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் சந்தானத்தின் துணையோடு ஓரு கல் ஒரு கண்ணாடியில் தப்பித்துவிட்டா விமர்சனம் எழுந்தது. தொடர்ந்து அவரும் பல படங்களில் நடித்தார். மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன.
அமைச்சர்: இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார் உதயநிதி ஸ்டாலின். ஒருபக்கம் எம்.எல்.ஏ, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருந்தவருக்கு திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அமைச்சர் பதவி என்பது விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட உதயநிதிக்கு நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார். அதேசமயம் கடைசி படம் பலராலும் கொண்டாடக்கூடிய படமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.
மாரி செல்வராஜ்: அதன்படி பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதால் தனது கடைசி படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் உதயநிதி. படமானது ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி: படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்துள்ளன. அதனையொட்டி அவர் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி, "விஜய் அவ்வளவு எளிதில் யாரிடமும் நண்பராகி விடமாட்டார். அப்படி நண்பரானால் மிகவும் நெருக்கமாக பழகுவார் விஜய். அந்த வகையில் நானும் விஜய்யும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.
என்ன பிரச்னை: ஆனால் குருவி படம் வெளியான பிறகு என்னிடம் அவரைபற்றியும், அவரிடம் என்னைப்பற்றியும் சிலர் தவறாக பேசினார்கள். இதன் காரணமாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. இதையடுத்து அவரை நேரில் சந்தித்து நடந்ததை கூறிய பிறகு நாங்கள் மீண்டும் நண்பர்களாகி விட்டோம்" என்றார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











