உதயநிதி ஸ்டாலின் அடுத்தப்பட அறிவிப்பு..தலைப்பே சும்மா மிரட்டலா இருக்கே!
சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்திற்கு அட்டகாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகும் தொடர்ந்து நல்ல படங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தை பார்த்த அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டினார்கள்.

மாமன்னன்
நெஞ்சுக்குநீதி திரைப்படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி நடித்து வருகிறார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ்,வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். மாரி செல்வராஜ் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இதுவே முதன் முறையாகும்.

வடிவேலு முக்கிய ரோலில்
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாபாத்திர பேர் தான் மாமன்னன் என்று கூறப்பட்ட நிலையில், வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் தான் மாமன்னன் என்றும், அவருக்கு மகனாகத்தான் உதயநிதி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு எதிரியாக அழகம்பெருமாள் நடித்து வருவதாகவும், அவரின் மகனாக பகத் பாசில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் மகிழ்திருமேனி
இந்நிலையில், இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவிப்புகள் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் தலைப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. கலகத்தலைவன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலகத்தலைவன்
மேலும், இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரேலி இணைந்து இசையமைக்கின்றனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாக கலகத்தலைவன் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் திரைப்படம் தான் கடைசி படம் என வதந்திகள் பரவி வந்த நிலையில், படத்தின் தலைப்பு வெளியாகி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











