அந்த இந்தி பட ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறாராமே? அஜித் பட தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை!
சென்னை: இந்தியில் ஹிட்டான, ஆர்டிகிள் 15 படத்தின் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின்றன.
அயுஷ்மன் குரானா, மனோஜ் பாவா, இஷா தல்வார், சயானி குப்தா உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம் ஆர்டிகிள் 15.
தமிழ் நடிகர் நாசர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அனுபவ் சின்ஹா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

சாதியின் பெயரால்
மதம், இனம், சாதி, மொழி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடை செய்யும் சட்டம்தான் 'ஆர்டிகிள் 15'. ஒரு கிராமத்தில் இரண்டு ஏழை சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்குப்பின் கொல்லப்பட்டு, மரக்கிளையில் தொங்க விடப்படுகிறார்கள். அதன் விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிக்கு சாதியின் பெயரால் பல்வேறு தடைகள் வருகிறது.

தென்னிந்திய உரிமை
அதை எப்படி முறியடித்து நடவடிக்கை எடுக்கிறார் என்பதுதான் கதை. இந்தப் படத்தின் தென்னிந்திய உரிமையை, தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கி இருக்கிறார். அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை', அடுத்து, 'வலிமை' படத்தை தயாரித்து வரும் அவர், ஆர்டிகிள் 15 படத்தையும் அஜித் நடிப்பில் ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது.

அருண்ராஜா காமராஜ்
அதோடு, இந்தப் படத்தில் நடிக்க தனுஷூம் ஆர்வமாக இருந்தார். இந்நிலையில் இதில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போனிகபூர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Recommended Video

அனு இம்மானுவேல்
இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. நடிகர் உதயநிதி ஸ்டாலின், ஏற்கனவே, ஜாலி எல்எல்பி என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார். லாக்டவுன் முடிந்ததும் மகிழ் திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் அவர் ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











