twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி... மறைந்த கி.ரா.விற்கு உதயநிதி அஞ்சலி

    |

    சென்னை : தமிழின் மூத்த எழுத்தாளர் கி ராஜநாராயணன் காலமானார்.

    அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    கல்லூரி நாட்களில் என்னை மறந்து லயித்துக்கிடந்த எழுத்து நாட்கள்.. கி.ரா மரணம்.. சீனுராமசாமி இரங்கல்!கல்லூரி நாட்களில் என்னை மறந்து லயித்துக்கிடந்த எழுத்து நாட்கள்.. கி.ரா மரணம்.. சீனுராமசாமி இரங்கல்!

    அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

    பல்வேறு விருதுகள்

    பல்வேறு விருதுகள்

    கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் மற்றும் அந்தமான் நாயக்கர் ஆகிய நாவல்களை எழுதிய கி. ராஜநாராயணன் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார். சாகித்ய அகாடமி, இலக்கிய சிந்தனை, கனடா தமிழ் தோட்ட விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

    சிறப்பு பேராசிரியர்

    சிறப்பு பேராசிரியர்

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கி.ரா நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். புதுச்சேரியில் வசித்துவந்த கி.ரா பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர்.

    அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

    அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு

    இந்நிலையில் அவரது மறைவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று கூறியுள்ளார். கி. ரா மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மூத்த கதைசொல்லி

    மூத்த கதைசொல்லி

    இதனிடையே உதயநிதி ஸ்டாலினும் கி.ரா.விற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். தமிழின் மிகச்சிறந்த மூத்த கதைசொல்லி என்று பாராட்டியுள்ள உதயநிதி, கரிசல்காட்டு மனிதர் வாழ்வை அவர்தம் மொழியிலேயே இலக்கியமாககியவர் என்றும் அவரது மறைவு தன்னை வேதனைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மகத்தான படைப்பாளி

    மகத்தான படைப்பாளி

    இதனிடையே நடிகர் கமல்ஹாசனும் கி. ராஜநாராயணன் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். கரிசல் என்னும் வட்டாரத்தை எழுதி பிரபஞ்ச உணர்வுகளை தொட்ட மகத்தான படைப்பாளி என்றும் அவருக்கு புகழஞ்சலி என்றும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    The legendary Ki Rajanarayanan passed away at the age of 98 due to age-related issues
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X