நிதி அகர்வால் நெஞ்சுக்குழிக்குள் இறங்கும் வியர்வை.. அழகான ராட்சஸியே பாட்டுக்கு இதுதான் அர்த்தமா?
சென்னை: நடிகை நிதி அகர்வாலின் ரொமாண்டிக் சீன் ஒன்று முதல்வன் படப் பாடலுடன் டிரெண்டாகி வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ் மற்றும் கலையரசன் நடிப்பில் நேற்று கலகத் தலைவன் திரைப்படம் வெளியானது.
அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியைத் தான் தற்போது நெட்டிசன்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

2 கோடி வசூல்
உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், பிக் பாஸ் ஆரவ் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி உள்ள கார்ப்பரேட் அரசியல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓடி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆரவ்வின் நடிப்புக்காகவே படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில், முதல் நாளிலேயே உதயநிதி படம் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெஞ்சுக்கு நீதி படம் முதல் நாளில் வெறும் 1 கோடி தான் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

நிதி அகர்வால் ஹீரோயின்
ஜெயம் ரவியின் பூமி மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்களில் நடித்து வந்த நடிகை நிதி அகர்வால் தான் இந்த படத்தில் உதயநிதிக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். படத்தில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், வந்து போகும் சில காட்சிகளில் க்யூட்டான ஹீரோயினாக வந்து சென்றுள்ளார். இந்நிலையில், அவரது காட்சி ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
நெஞ்சுக்குழியில் இறங்கும் வியர்வை
உதயநிதி ஸ்டாலின் நாயகி அருகே இருக்கும் போது நிதி அகர்வால் நெற்றியில் இருந்து வியர்வை துளி அப்படியே இறங்கி அவரது நெஞ்சுக்குழிக்குள் விழும் காட்சியை கலகத் தலைவன் படத்தின் ரொமான்டிக் சீனுக்காக படமாக்கி உள்ளார் இயக்குநர் மகிழ் திருமேனி. அந்த காட்சியைத் தான் தற்போது முதல்வன் படத்தின் பாடலோடு மிக்ஸ் செய்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அழகான ராட்சஸியே
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா நடிப்பில் உருவான முதல்வன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான அழகான ராட்சசியிலே பாடலில் வைரமுத்து எழுதிய "நீராக நான் இருந்தால்.. உன் நெத்தியில நான் இறங்கி.. கூரான உன் நெஞ்சில் குதித்து அங்கு குடியிருப்பேன்" வரிகளுக்கு இயக்குநர் மகிழ் திருமேனி உயிர் கொடுத்துத் தான் இந்த காட்சியை படமாக்கி உள்ளார் என்றும் அப்போ புரியல.. இப்போ புரியுது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











