மாரி செல்வராஜை சந்தித்த உதயநிதிஸ்டாலின்.. என்ன விஷயம்னு பாருங்க!
சென்னை: பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்த இயக்குநர் மாரி செல்வராஜ் புதிதாக தான் கட்டியுள்ள வீட்டிற்கு சமீபத்தில் குடியேறி உள்ளார்.
இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர் ராம், மற்றும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் மாரி செல்வராஜின் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் வாழ்த்தி உள்ளனர்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் ஒரு படத்தில் நடிக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ்
இயக்குநர் ராமின் சிஷ்யனான மாரி செல்வராஜ் பா. ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். சமூக எண்ணம் கொண்ட கதைகளையே தொடர்ந்து படமாக்கியும் வருகிறார் மாரி செல்வராஜ்.

கர்ணன்
பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. அசுரன் படத்திற்கு பிறகு நடிகர் தனுசுக்கு மிகப்பெரிய வெற்றியையும் நடிப்புக்கான தீனியையும் அந்த படம் போட்டது குறிப்பிடத்தக்கது. கர்ணன் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கின.

புதுவீடு
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்கும் படத்தை ஆரம்பித்த மாரி செல்வராஜ், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலினின் படத்தை இயக்கும் முடிவுக்கு வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் புதிதாக தான் கட்டிய வீட்டிற்கு குடிபோகும் விழாவினை கோலாகலமாக திரை பிரபலங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ நடத்தினார்.

குரு ராம்
இயக்குநர் மாரி செல்வராஜின் குருவான இயக்குநர் ராம் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து இருவருக்குமான குரு சிஷ்ய உறவு தொடர்ந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ராம் மட்டுமின்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் கலந்து கொண்டார். கர்ணன் படத்தை தயாரித்தவரும் அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பா ரஞ்சித் பங்கேற்பு
புதிதாக வீடு கட்டியிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார் இயக்குநரும் பரியேறும் பெருமாள் படத்தின் தயாரிப்பாளருமான பா ரஞ்சித். இருவரும் பேசிக் கொள்ள ஒரு தேனீர் போதும் என அந்த புகைப்படங்களை ஷேர் செய்து மாரி செல்வராஜ் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாரி செல்வராஜின் புதிய வீட்டுக்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜின் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி புகைப்படங்களும், மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











