சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம்… பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் !

சென்னை : பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள சார்பட்டா பரம்பரை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

கபிலன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யா அந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உடலை முறுக்கேற்றி பாக்சராக கனகச்சிதமாக நடித்துள்ளார்.

சார்பட்ட பரம்பரை படத்தை நடிகரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் பாராட்டி உள்ளார்.

சுவாரசியமான கதை

சுவாரசியமான கதை

வடசென்னையில் நிறைய பாக்ஸிங் பரம்பரைகள் உள்ளன. இதில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் பல காலமாகப் போட்டி இருக்கிறது. கடைசியில் ஒரு போட்டி, அதில் தோற்றுவிட்டால் சர்பட்டா பரம்பரை இனி சண்டையே போடக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே சர்ப்பட்ட பரம்பரை படத்தின் சுவாரசியமான கதை,

சூப்பர் நடிப்பு

சூப்பர் நடிப்பு

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா, பசுபதி ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ்பிரதாப், சபீர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதில் கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார் ஆர்யா. அவரது நடிப்பை அனைவரும் பாராட்டி உள்ளனர்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் சார்பட்டா பரம்பரை படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 70களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள சார்பட்டா பரம்பரை முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும் அதை கழகத் தலைவர் கலைஞர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தி இருப்பது சிறப்புக்குரியது.

Recommended Video

SARPATTA - Poster pakiri review | Filmibeat Tamil
ஆர்யா அசத்தல் நடிப்பு

ஆர்யா அசத்தல் நடிப்பு

கபிலன் அசத்தியுள்ள நண்பர் aryaoffl, கழகத்துக்கார்Pasupathuoffl ரங்கன் வாத்தியாராக சார், டான்ஸி ரோஸ்Shabzkar, வேம்புலி Johnkokken1,#Johnvijay என ஒவ்வொரு கதாபாத்திரங்ளையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர்beemjiக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X