தமிழ்நாட்டிலேயே இப்போ ரெண்டு டான் தான்.. உதயநிதி ஸ்டாலின் சொன்ன அந்த 2 பேர் யாரு தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு சன் பிக்சர்ஸ் இப்படியொரு புரமோஷன் விழா நடக்கும் என எதிர்பார்த்த விஜய் ரசிகர்கள், நிச்சயம் இந்த நிகழ்ச்சியை பார்த்தால் கடுப்பாகத்தான் செய்வார்கள்.
அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் இப்போதைக்கு ரெண்டு டான் தான் என பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டான் டிரைலர் லாஞ்ச்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் மே 13ம் தேதி வெளியாக உள்ள டான் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யாவின் வருகைக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆர்ஜே விஜய் மற்றும் அஞ்சனா இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
லைகா மற்றும் எஸ்கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் டான் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கி உள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார். சிவகார்த்திகேயனை வந்ததும் ஆரத் தழுவி அவர் அருகே அமர அரங்கமே அதிர்ந்தது.

தமிழ்நாட்டின் டான்
உதயநிதி ஸ்டாலின் மேடையேறி பேசிய போது கல்லூரி போர்ஷன் மட்டுமில்லைங்க ஸ்கூல் போர்ஷனில் சிவகார்த்திகேயன் சின்ன பையனா சூப்பராக நடித்துள்ளார். 10 நாட்களுக்கு முன்பாகவே படத்தை பார்த்து விட்டேன். நல்ல படத்தை பார்த்த ஃபீலிங் வந்துச்சு. டாக்டரை விட டான் சிறப்பாக இருக்கும் என்றார். மேலும், இப்போதைக்கு தமிழ்நாட்டின் டான் சிவகார்த்திகேயன் என்றார்.

இவங்க ரெண்டு பேரு தான்
சிவகார்த்திகேயன் ஒரேயடியாக கையை எடுத்துக் கும்பிடு போட்டு விட்டார். உடனடியாக சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இவங்க ரெண்டு பேரு தான் தமிழ்நாட்டின் டான் என்றார். இவங்க எழுதி, இசையமைத்து பாடும் பாடல்கள் எல்லாமே வேறலெவல் ஹிட் அடித்து வருகிறது என்று பாராட்டினார்.

பொய் சொன்னாரா உதயநிதி
டான் படத்தின் டிரைலரின் இறுதியில் அரசியல்வாதினாலே பொய் பேசணும் என்கிற வசனம் இடம் பெற்று இருக்கும் அதனை குறிப்பிட்டு உடனடியாக தான் சொன்னது பொய் என்பது போல பேசி ஸ்கோர் செய்து விட்டார் உதயநிதி ஸ்டாலின்.


Click it and Unblock the Notifications











