Don't Miss!
- News
பரந்தூர் ஏர்போர்ட் உறுதி.. பிரச்சனையை தமிழ்நாடு அரசுதான் தீர்க்கனும்: மத்திய அமைச்சர் சிந்தியா
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாமன்னன் கடைசி படம்.. நடிப்புக்கு முழுக்கு போட்ட உதயநிதி ஸ்டாலின்.. அப்போ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?
சென்னை: சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினாக இன்று ஆளுநர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகை உதயநிதி ஸ்டாலின் அறையின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படம் தான் கடைசி படம் என அறிவித்துள்ளார்.
என்னிடம் கட்டா குஸ்தி படத்தை போட்டு காட்ட விஷ்ணுவிற்குதைரியம் இருந்தது...உதயநிதி வெளிப்படையான பேச்சு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்து அமைச்சராக பதவி உயர்வு அடைந்துள்ளார். அவருக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இனிமே நடிக்க மாட்டேன்
அமைச்சராக பதவியேற்ற நிலையில், இனிமேல் முழுக்க முழுக்க கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்றும் கமல்ஹாசன் படத்தில் நடிப்பதாக அறிவித்ததில் இருந்தும் விலகிக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

கடைசி படம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் மற்றும் வடிவேலு நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. விரைவில் அந்த படம் வெளியாக உள்ள நிலையில், அதன் பின்னர் நடிக்கப் போவதில்லை என்கிற அறிவிப்பை அதிரடியாக அறிவித்துள்ளர் உதயநிதி ஸ்டாலின்.

காமெடி டு கடமை
சூர்யாவின் ஆதவன் படத்தில் கேமியோவாக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். 2012ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா என தொடர்ந்து சந்தானத்துடன் காமெடி படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனிதன், நிமிர், நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் என டோட்டலாக டிரான்ஸ்ஃபார்ம் ஆனார்.

அப்போ ரெட் ஜெயண்ட் மூவிஸ்
2008ம் ஆண்டு விஜய்யின் குருவி படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தயாரித்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். மேலும், விநியோகஸ்தராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் கடந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களை ரிலீஸ் செய்துள்ளார். அடுத்த ஆண்டும் துணிவு படத்தை வெளியிடுகிறார். சென்னை உள்ளிட்ட சில இடங்களில் வாரிசு படத்தை வெளியிடுகிறார். இனிமே நடிக்க மாட்டேன் என அறிவித்த நிலையில், தயாரிப்பாளராக வலம் வருவாரா? அல்லது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை வேறு ஒருவர் தலைமையில் நடத்துவாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.