மாமன்னன் திரைப்படம் தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கும்... உதயநிதி ஸ்டாலின்
சென்னை: நாளைய டெபு சி.எம் என்று யூகிக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'மாமன்னன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி ஒரு ஷெட்யூல் முடமுடிவடைந்துள்ளது.

100% அரசியலில் கவனம்
இந்த நிலையில் ஒரு பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், ‘மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.. சினிமாவை விட அரசியலில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் அரசியலில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும் எனவே 100% அரசியலில் கவனம் செலுத்துவதற்காகவும், அரசியலை இன்னும் அதிகம் கற்று கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் சொல்லியுள்ளார்.

அரசியல் பணிகளில் அப்டேட்
உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி டீம் அமைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக சினிமா டிஸ்டிரிபியூஷன் பார்ப்பதற்கு ஒரு தனி டீம், சோசியல் மீடியா ஹாண்டில் செய்வதற்கு ஒரு தனி டீம், அரசியல் சார்ந்த பணிகளில் ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து கொள்வதற்கு ஒரு தனி டீம், என்று பலவிதமான குழுக்களுடன் தினமும் செல்போன் மூலம் பேசி அடுத்தகட்ட முயற்சிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி...
இதற்கு நடுவில் சினிமா சூட்டிங், சினிமா பேட்டி, பிரமோஷன், போன்ற விஷயங்களிலும் நேரம் காலம் ஒதுக்கி முடிந்தவரை செயல்பட்டு வருகிறார். அரசியல் சார்ந்த பல இளைஞர்கள் தொண்டர்கள் உதயநிதி என்கின்ற இந்த பெயருக்குப் பின்னால் இருக்கும் பொறுப்பையும் அவரது அடுத்தகட்ட திட்டங்களையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருப்பதினால் அவர்களுடைய கனவுகளை மேலும் மேலும் நிறைவேற்ற சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்து, முழு கவனத்துடன் அரசியலில் ஈடுபட்டு செயல்பட்டால்தான் சில பெரிய பொறுப்புகளையும் கனவுகளையும் நிறைவேற்ற முடியும் என்று உதயநிதி தீர்க்கமாக நம்புகிறார்.
Recommended Video

அடுத்த கட்ட முடிவுகள்
சினிமாவில் இருந்து வந்த பல அரசியல் தலைவர்கள் ஒரு காலகட்டத்தில் முழுவதுமாக அரசியலில் ஈடுபட்டு சினிமா நண்பர்களுக்கு சப்போர்ட் செய்வது மட்டுமே தங்களது முக்கிய பணியாக அமைத்துக் கொண்டார்கள். அப்படி இருக்க தாத்தா கலைஞர் கருணாநிதி மற்றும் அப்பா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழிநடத்தலின் பெயரில் உதயநிதி எடுக்கும் அடுத்த கட்ட முடிவுகள் 2022க்குள் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று பலரும் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











