Maaveeran Review - மாவீரன் படம் எப்படி இருக்கு?.. முதல் விமர்சனத்தை சொன்ன உதயநிதி ஸ்டாலின்
சென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படம் பார்த்த உதயநிதி ஸ்டாலின் தனது விமர்சனத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் தோல்வியடைந்ததால் இந்தப் படம் வெற்றியடைய வேண்டும் என்ற ஆவலில் அவர் இருக்கிறார். இதனையொட்டி நடிப்பிலும் சரி, புரோமோஷனிலும் சரி எந்தக் குறையும் வைக்கவில்லை சிவகார்த்திகேயன். படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

சூடுபிடிக்கும் புரோமோஷன்: நாளை வெளியாவதையொட்டி கடந்த சில நாட்களாக மாவீரன் புரோமோஷன் தீவிரமாக நடந்தது. படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடந்தது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மெகா ஹிட்டாகும் என கணித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி மடோன் அஸ்வின் சிறந்த இயக்குநர் என்பதால் நிச்சயம் மோசமான அல்லது சுமாரான படத்தை கொடுத்து ஏமாற்றமாட்டார் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். படத்தின் புரோமோஷன் உள்நாடு, வெளிநாடுகளில் நடந்துவருகிறது. அவற்றில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார்.
விஜய் சேதுபதி வாய்ஸ்: படத்தின் மற்றொரு ஹைலைட்டாக விஜய் சேதுபதி வாய்ஸ் இருக்கிறது. கதைப்படி ஒரு குரல் சொல்வதைத்தான் சிவகார்த்திகேயன் கேட்பார். அந்தக் குரலுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். சிவாவுக்கு போட்டி நடிகர் என பலரால் கருதப்பட்ட விஜய் சேதுபதி படத்துக்கு குரல் கொடுத்திருப்பதன் மூலம் நாங்கள் போட்டியாளர்கள் இல்லை ஒருவருக்கொருவர் துணை நிற்பவர்கள் என்பதை சொல்லியிருக்கிறார்.
நாளை ரிலீஸ்: படம் நாளை வெளியாவதை ஒட்டி டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடந்துவருகிறது. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட் புக்கிங்கில் வேகம் இல்லை எனவும்; பாதிக்கு பாதிதான் சீட்டுகள் நிரம்பிவருவதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேசமயம் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் அதிகரித்திருப்பதால் இன்று மாலைக்குள் நிச்சயம் டிக்கெட் புக்கிங் சூடுபிடித்துவிடும் எனவும் திரையரங்க உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

முதல் விமர்சனம்: இந்நிலையில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாவீரன் படத்தை பார்த்திருக்கிறார். அதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாவீரன் என குறிப்பிட்டு இரண்டு தம்ஸ் அப் எமோஜிகளை பகிர்ந்திருக்கிறார். விநியோகஸ்தராக உதயநிதி ஸ்டாலின் இருந்ததால் அவர் ஒரு படம் குறித்து சரியாக கணித்துவிடுவார். தற்போது மாவீரன் படம் குறித்து எதுவுமே சொல்லாமல் தம்ஸ் அப் போட்டிருப்பதன் மூலம் அவர் படத்தை நன்றாக இருக்கிறது என சொல்கிறாரா இல்லை சுமார் ரகம் என சொல்கிறாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
நீதிமன்றம் உத்தரவு: இதற்கிடையே இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை மறைத்த பிறகுதான் ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களில் மாவீரன் படத்தை வெளியிட வேண்டும் எனவும், எந்த அரசியல் கட்சியையும் குறிப்பிடவில்லை என 40 விநாடிகள் பொறுப்பு துறப்பு போட்ட பின்னர்தான் திரையரங்குகளில் வெளியிட எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











