உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகள் 15 தமிழ் ரீமேக் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் அப்டேட் வெளியானது
சென்னை : பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படம் ஆர்டிகள் 15
ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று மாஸ் வெற்றிபெற்ற இந்தப் படம் இப்போது தமிழில் ரீமேக் ஆகி வருகிறது இதனை கனா பட இயக்குனர் அருண்ராஜ் காமராஜா இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வர டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சாதிய பாகுபாடுகளை பற்றி
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆயுஷ்மான் குரானா நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சாதிய பாகுபாடுகளை பற்றி ஆணித்தனமாக கூறும் திரைப்படமாக ஆர்டிகள் 15 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
ஹிந்தியில் வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய தயாரிப்பாளர் போனி கபூர் அப்போதே தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்தார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை தொடர்ந்து போனிகபூர் இப்பொழுது ஆர்டிகள் 15 தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜா இந்தப் படத்தை இயக்க உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.

மீண்டும் ஷூட்டிங் தாமதமானது
இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே தொடங்கப்பட்டது. பின் தொற்று பரவல் அதிகமான காரணத்தினால் தொடர்ந்து படப்பிடிப்பு தள்ளிப்போனது அதேசமயம் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரச்சாரத்தில் இருந்ததால் மீண்டும் ஷூட்டிங் தாமதமானது. இந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கியது. இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார்.

டைட்டில், மோஷன் போஸ்டர் ரிலீஸ்
இந்த நிலையில் ஆர்டிகள் 15 தமிழ் ரீமேக்கின் முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஆர்டிகள் 15 தமிழ் ரீமேக்கின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் அக்டோபர் 16ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்திருந்த நேர்கொண்டபார்வை மிகப்பெரிய வெற்றிபெற்ற சூழலில் அடுத்ததாக மீண்டும் அஜித்துடன் இணைந்து வலிமை படத்தை தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கை இவர் தயாரித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு கூடியுள்ளது.


Click it and Unblock the Notifications











