Kalaga Thalaivan Twitter Review: உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வாலின் கலகத் தலைவன் ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் வெளியாகி உள்ள கலகத் தலைவன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

தடையறத் தாக்க, மீகாமன், தடம் படங்களை இயக்கிய இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. ஸ்ரீகாந்த் தேவா மற்றும் ஆரல் காரோலி இணைந்து இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின், பிக் பாஸ் ஆரவ், கலையரசன், நிதி அகர்வால் நடிப்பில் வெளியாகி உள்ள இந்த படம் எப்படி இருக்கு என ரசிகர்கள் ட்விட்டரில் போட்டு வரும் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

உதயநிதி ஸ்டாலின் படம்

உதயநிதி ஸ்டாலின் படம்

காமெடி படங்களில் இருந்து டோட்டலாக தன்னை சமூக அக்கறை சார்ந்த படங்கள் பக்கமும் அரசியல் வகை படங்கள் பக்கமும் முழுவதுமாக மாற்றி வரும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் தான் கலகத் தலைவன். மகிழ் திருமேனி இந்த டைட்டிலை சொன்னதுமே உதயநிதி ஓகே சொல்லியிருப்பார் என்றே ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நிதி அகர்வால் ஜோடி

நிதி அகர்வால் ஜோடி

சிம்புவின் ஈஸ்வரன், ஜெயம் ரவியின் பூமி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வால் எங்கே ஆளே காணோம் என கோயில் கட்டிய சென்னை ரசிகர்கள் தேடி வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கலகத் தலைவன் படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நிதி அகர்வால்.

பிக் பாஸ் ஆரவ் வில்லன்

பிக் பாஸ் ஆரவ் வில்லன்

பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னரான ஆரவ், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் மூலம் ஹீரோவானார். ஆனால், அந்த படம் படுதோல்வியடைந்தது. அவர் நடித்த அடுத்த படமான ராஜபீமா என்ன ஆனது என்றே தெரியவில்லை. நடிகை ராஹேய் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன ஆரவ் கலகத் தலைவன் படத்தில் மிரட்டல் வில்லனாக அதிரடி காட்டி உள்ளார்.

படம் எப்படி இருக்கு?

படம் எப்படி இருக்கு?

மகிழ் திருமேனி இயக்கியுள்ள கலகத் தலைவன் திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் வித்தியாசமான திரைக்கதையுடன் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஹீரோ உதயநிதிக்கும் வில்லன் ஆரவ்வுக்கும் இடையே நடக்கும் வழக்கமான கேட் அண்ட் மவுஸ் கேம் படத்தை ஸ்லோ செய்கிறது. படத்தை ஒரு முறை பார்க்கலாம்.. ஓகே என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

பெஸ்ட் படம்

பெஸ்ட் படம்

உதயநிதி நடித்த படங்களிலேயே மிகச் சிறந்த படமாக கலகத் தலைவன் படம் வந்திருக்கு. உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு சூப்பர் என இந்த ரசிகர் கலகத் தலைவன் படத்தை பாராட்டித் தள்ளி இருக்கிறார். இன்டர்வெல் மற்றும் கிளைமேக்ஸ் தீயாக இருக்கு என கமெண்ட் போட்டுள்ளார்.

மகிழ் திருமேனி ஏமாத்திட்டாரு

மகிழ் திருமேனி ஏமாத்திட்டாரு

டீசன்ட் த்ரில்லர் படம் தான். ஆனால், மகிழ் திருமேனி படம்னு ரொம்பவே எதிர்பார்த்து வந்து ஏமாந்துட்டேன். உதயநிதி மற்றும் ஆரவ் இருவரும் வெறித்தனமாக நடித்துள்ளனர். ஆனால், நிதி அகர்வால் உடன் வரும் காதல் போர்ஷன்கள் தான் படத்திற்கு பெரும் மைனஸாக மாறி உள்ளது. 2.25 ரேட்டிங் தான் என இந்த நெட்டிசன் படம் சுமார் என்று சொல்லி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X