கண்ணை நம்பாதே முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. திரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி!

சென்னை : உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி உள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது

இயக்குநர் மு மாறன் இயக்கிய திரைப்படம் கண்ணை நம்பாதே இத்திரைப்படத்தில், ஆத்மிகா, பூமிகா சாவ்லா, பிரசன்னா, ஸ்ரீகாந்த், சதீஷ், சுபிக்ஷா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரில்லர் ஜனரில் உருவாகி உள்ள கதையில், உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக நடித்துள்ளார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின்

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான சைகோ திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்து பாராட்டை பெற்ற உதயநிதி, அதே போன்ற க்ரைம் திரில்லர் கதையில் மீண்டும் நடித்துள்ளார். இந்த படத்தில் உதயநிதி அருண் என்ற கதாபாத்திரத்தில், எதார்த்தமான இளைஞனாக வந்த பாராட்டை பெற்றார்.

திருப்புமுனையான படம்

திருப்புமுனையான படம்

உதயநிதிக்கு ஜோடியாக ஆத்மிகா அவருடைய பங்கை உணர்ந்து நடித்தள்ளார். ஹிப்பாப் ஆதி நடித்த மீசை முறுக்கு படத்தில் அறிமுகமான ஆத்மிகா தனக்கான நடிப்பு திறனை நரூபிக்கு திரைப்படத்திற்காக காத்திருந்த நிலையில், கண்ணை நம்பாதே திரைப்படம், ஆத்மிகா சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

க்ரைம், திரில்லர் கதை

க்ரைம், திரில்லர் கதை

பிரசன்னா,ஸ்ரீகாந்த், சதீஷ் என அனைவரும் அவர் அவர் கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ரோஜா கூட்டம் படத்தில் பார்த்த ஸ்ரீகாந்த் , பூமிகா இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்து என்ன, அடுத்து என்ன, படம் சுவாரசியமாக கதையுடன் நகர்கிறது. ஒரு திரில்லர் கதைக்கு ஏற்ற தரமான இசையை இசையமைப்பாளர் சித்திகுமார் கொடுத்து இருக்கிறார்.

முதல் நாள் வசூல் விவரம்

முதல் நாள் வசூல் விவரம்

கண்ணை நம்பாதே திரைப்படம் நேற்று வெளியான நிலையில், முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 2.15 கோடியும், உலகம் முழுவதும், 35லட்சத்தையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்றும் நாளையும் வார விடுமுறை என்பதால், இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த உதயநிதி

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த உதயநிதி

நடிப்பு ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என தனது பயணத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்,சட்டமன்றத் தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவியேற்றபின், நடிப்பை விட, அரசியலில் கவனம் செலுத்தி மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்தார். அதன் பின் அவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை அடுத்து,மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் கூறி நடிப்பில் இருந்து விலகிவிட்டார். உதயநிதியின் கடைசி படத்திற்கு முந்ததைய படம் என்பதால், இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்பை உதயநிதி பூர்த்திசெய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X