Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
எல்லோரும் சமம்னா யாரு ராஜா ஆகுறது...அனல் பறக்கும் நெஞ்சுக்கு நீதி டிரைலர்
சென்னை : நெற்றி பொட்டில் அடித்தது போன்ற வசனங்கள், மிரட்டலான காட்சிகளுடன் உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலருக்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.
பெரிய
டைரக்டர்
படத்தில்
வில்லன்,4
மணி
நேரத்தில்
ஜெய்பூர்
ஷூட்டிங்,
விதார்த்
சிறப்பு
பேட்டி
தமிழில் அரசில், போலீஸ் படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. டைரக்டர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள படம். ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்
இந்தியில் 2019 ம் ஆண்டு ரிலீசான பிளாக்பஸ்டர் படமான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. தமிழக முன்னாள் முதல்வரும், உதயநிதியின் தாத்தாவுமான மு.கருணாநிதி எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற புத்தகத்தின் டைட்டிலேயே உதயநிதி நடித்திருப்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டிரைலர், பாடல் ரிலீஸ்
2021 ம் ஆண்டு டிசம்பர் மாதமே இந்த படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் இந்த படம் 2022 ம்ஆண்டு மே 20 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தில் டிரைலர் வெளியிடப்பட்டது.

டிரைலர் எப்படி இருக்கு
எல்லோரும் சமம்னா யாரு ராஜா என்ற மயில்சாமியின் டயலாக்குடன் ஆரம்பமாகிறது டிரைலர். சாதி வேறுபாட்டை மையமாகக் கொண்டது தான் நெஞ்சுக்கு நீதி படம் என்பது டிரைலரில் இருந்தே தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கெட்அப்பில் செம கெத்தாக நடித்துள்ளார். உண்மை வெளிவரும்னா சாக்காடையில இறங்குற முதல் ஆள் நானாக தான் இருக்கும் என உதயநிதி பேசும் வசனம் அனல் தெறிக்கிறது.
அடுத்த பிளாக்பஸ்டர் ரெடி
இந்தியில் ஆர்டிகிள் 15 பிளாக்பஸ்டர் படமாக ஓடியதை போல் நெஞ்சுக்கு நீதி படமும் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திபு நினன் தாமஸ் இசையில் டிரைலரிலேயே மிரட்டி உள்ளார். டிரைலரை போல் படமும் நிச்சயம் அனைத்து தரப்பினரிரையும் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
“புத்தம் புது இசை மலரை அறிமுகப்படுத்துகிறேன்”: ரோஜா 30ஆண்டுகள், ரஹ்மானுக்கு கிடைத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
-
இயக்குநர்களை முட்டாளுன்னு சொல்லாதே.. ப்ளூ சட்டை அணிந்து வந்து ப்ளூ சட்டை மாறனை எச்சரித்த பேரரசு!
-
“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி