தமிழ் ரசிகர்களை தியேட்டர்களில் மிரட்டி வரும் சைக்கோ.. அடுத்த மாதம் டோலிவுட்டை மிரட்டப் போகுது!
Recommended Video
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் மிரட்டி வரும் சைக்கோ வரும் பிப்ரவரி மாதம் டோலிவுட்டில் தெலுங்கு டப்பிங் வெர்ஷனில் வெளியாகிறது.
டபுள் மீனிங் புரொடக்ஷன் தயாரிப்பில் கடந்த ஜனவரி 24ம் தேதி சைக்கோ ரிலீசானது.
படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களால் தெலுங்கு டப்பிங் வெர்ஷனை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இளையராஜா
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், இயக்குநர் ராம், சிங்கம் புலி, சாஜி சென், ரேணுகா மற்றும் ராஜ்குமார் பிச்சுமணி என பலர் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கோ படத்தை பார்த்தவர்கள் நிச்சயம் அதன் பின்னணி இசையை பிரமித்து பேசாமல் இருக்கமாட்டார்கள். இசைஞானி இளையராஜா இசையில் சைக்கோ மிரட்டுகிறது.

காமெடி நாயகன்
ஆதவன் படத்தை தயாரித்த உதயநிதி ஸ்டாலின் அந்த படத்தில் ஒரு சின்ன ரோலில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்திருப்பார். அதனை தொடர்ந்து ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகனாக அறிமுகமானார். சந்தானத்துடன் காமெடி காம்பினேஷன் ஒர்க்கவுட் ஆனதால் தொடர்ந்து பல காமெடி படங்களில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வந்தார்.

வித்தியாசமான ரோல்
பிறகு, தன்னை நல்ல நடிகராக மாற்றிக் கொள்ள ஆசைப்பட்ட உதயநிதி, மனிதன், நிமிர், கண்ணே கலைமானே என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக கற்று வந்தார். இந்நிலையில், மிஷ்கினின் சைக்கோ படத்தில் முதல் முறையாக பார்வை தெரியாத நபராக நடித்து அசத்தியுள்ளார்.

நல்ல வரவேற்பு
ராட்சசன் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரில்லர் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களை குறி வைத்து எடுக்கப்பட்ட இந்த சைக்கோ படம், அவர்களது பாராட்டுக்களுடன் திரையரங்கில் மக்களை மிரட்டி வருகிறது. கர்ப்பிணி பெண்கள், இதய நோயாளிகள் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கு டப்பிங்
தமிழில் கடந்த ஜனவரி 24ம் தேதி வெளியான சைக்கோ படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ள நிலையில், இந்த படத்தின் தெலுங்கு டப்பிங் வெர்ஷனை உடனடியாக அடுத்த மாதமே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி 21ம் தேதி டோலிவுட் ரசிகர்களை சைக்கோ மிரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











