முடியாது, முடியாது என்னால் முடியாது: மனைவிக்கே 'நோ' சொன்ன உதயநிதி ஸ்டாலின்
Recommended Video

சென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுக்கு நோ சொல்லியுள்ளார்.
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகிவிட்டார். தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். டான்ஸ் ஆடுவதில் கூட முன்னேறி வருகிறார்.
அவரின் மனைவி கிருத்திகா ஒரு பக்கம் படங்களை இயக்கி வருகிறார்.

மனைவி
கணவன் ஹீரோவாக நடிக்க மனைவி அந்த படத்தை இயக்க, ரசிகர்கள் அதை பார்த்து ரசிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதுவரை உதயநிதி தனது மனைவியின் இயக்கத்தில் நடிக்கவில்லை.

கிருத்திகா
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி தனது மனைவிக்கு போன் செய்து, நீ ஏன் என்னை வைத்து படம் எடுக்கவில்லை என்று கேட்டார். அதற்கு அவரோ தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என பொசுக்கென்று தெரிவித்துவிட்டார்.

தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் கிடைத்தால் படம் பண்ணலாம் என்று கிருத்திகா உதயநிதியிடம் தெரிவித்தார். ஆனால் அந்த கதை தான். முதலில் ஒரு கதை சொன்னேன்ல அந்த கதை தான் என்றார் கிருத்திகா.

முடியாது
அந்த கதை என்றால் நான் நடிக்கவே மாட்டேன் என்றார் உதயநிதி. எடுத்தவுடனேயே ஹீரோ செத்துடுவாராம், அந்த கதையை தான் கிருத்திகா உதயநிதியிடம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











