எங்கம்மா கேட்ட கேள்வி.. நானும் அப்பாவும் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டோம்.. உதயநிதி செம ஓப்பன்!

சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பெரிய படங்களை ரிலீஸ் செய்து வரும் கேள்வி தொடங்கி சமீபத்தில் வெளியான லவ் டுடே படம் வரை ஏகப்பட்ட கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பட்டு பட்டென பதில் அளித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேன்டா படங்களில் சந்தானத்துடன் எந்தளவுக்கு காமெடியாக நடித்தாரோ இப்பவும் அப்படியே படு கேஷுவலாக உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஆர்யாவின் கேப்டன் படம் எப்படி இருந்தது என்பது குறித்தும் செம ஓப்பனாக பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

ரெட் ஜெயண்ட் ராஜ்ஜியம்

ரெட் ஜெயண்ட் ராஜ்ஜியம்

லவ் டுடேன்னு ஒரு படம் வந்துருக்குப்பா.. அதுவும் நீதான் ரிலீஸா? ஆமாம்ப்பான்னு சொன்னேன். காபி வித் காதல்ன்னு இன்னொரு படம் வந்திருக்குப்பான்னு சொன்னேன், அதுவும் நீதான் ரிலீஸான்னு கேட்டர். ஆமாம்ப்பான்னு சொன்னேன் என உதயநிதி ஸ்டாலின் ஆரம்பத்திலேயே படு ஓப்பனாக பேசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

மனசாட்சி இருக்கா ஆர்யா

மனசாட்சி இருக்கா ஆர்யா


பார்ட்னர் கேப்டன் படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. படம் பார்த்துட்டு போன் பண்ணுன்னு ஆர்யா கால் பண்ணாரு, படம் பார்த்துட்டு நானும் போன் பண்ணல, அவரும் போன் பண்ணல.. அதுக்குப்புறம் பார்த்தப் போது.. யோவ் கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா? இதுக்கு பிரடேட்டரையாவது திரும்ப எடுத்து வச்சிருக்கலாமேன்னு சொன்னேன் என ஆர்யாவை க்ளீன் போல்ட் பண்ணிட்டார்.

லவ் டுடேவுக்கு பாராட்டு

லவ் டுடேவுக்கு பாராட்டு

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை குடும்பத்துடன் பார்த்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அப்பா மற்றும் அம்மாவுக்கும் இந்த படம் ரொம்பவே பிடித்திருந்தது என்றார். மேலும், அவர் வெளிப்படையாக சொன்ன சுவாரஸ்ய தகவலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நானும் அப்பாவும் நோ சொல்லிட்டோம்

நானும் அப்பாவும் நோ சொல்லிட்டோம்

படத்தை பார்த்து விட்டு வெளியே வந்ததும், இது நல்லா இருக்கே, நாமளும் போனை மாற்றிக் கொள்ளலாமா? என அம்மா கேட்டாங்க.. அதுக்கு, நானும் அப்பாவும் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டோம் என உதயநிதி சொல்லி சிரித்ததை பார்த்து மனுஷன் என்ன இப்படி வெளிப்படையா பேசுறாரே என ரசிகர்கள் கமெண்ட்டுகள் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X