புஷ்பா பட பாணியில் ஆட்சி நடக்குது.. முதலமைச்சர் விஜய்யை விளாசிய உதயநிதி
சென்னை: முதலமைச்சர் விஜய் மே 13ஆம் தேதி தனது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்த நிலையில், சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், இந்த ஆட்சி புஷ்பா பட பாணியில் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது என்று விமர்சித்தார்.

அதாவது, தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், திமுகவின் கூட்டணியில் இருந்த விசிக, இரண்டு கம்யூனிஸ்ட்கள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உள்ளிட்டோர் ஆதரவில் முதலமைச்சராக பதவியேற்றார். இப்படி இருக்கையில், அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அப்படி ஆதரவு தெரிவித்த, பிளவுப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் வீட்டிற்கு புதிய சோபா சென்றது, அதன் பின்னாலே புதிய முதலமைச்சரும் சென்றார். இதைப் பார்த்த மக்கள் இதை, Change என்று நினைக்கவில்லை Ex Change மாடல் ஆட்சியாக இருக்கிறதே என்ற சந்தேகம் வருகிறது” என்று கூறி உள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பேசு பொருளாகவும் உருவாகி உள்ளது.
நம்பிக்கை போகுது: மேலும் அவர் பேசுகையில், இந்த நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் வாக்களிக்காமல் திமுக வெளியேறுகிறது. மொத்தம் சுமார் 4 கோடியே 93 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் ஆளும் கட்சிக்கு ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரம் வாக்குகள் தான் வாக்களித்துள்ளனர். மீதம் உள்ள மூன்று கோடியே 21 லட்சம் பேர் தவெகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். சுமார் 65 சதவீத மக்கள் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அப்படி இருக்கையில், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் எங்களுக்குமே நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
உதயநிதி எக்ஸ் போஸ்ட்: இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம்.
குதிரை பேரம்: தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை.மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications