சூர்யாவுடன் ஜெய் பீம் படம் பார்த்த இன்பநிதி.. வைரலாகும் புகைப்படம்.. படத்துக்கு குவியுது பாராட்டு!
சென்னை: நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் பிரத்யேக காட்சியை சூர்யாவுடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி பார்த்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் வரும் நவம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
ஜெய் பீம் படத்தின் பிரத்யேக காட்சி பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக நண்பர்களுக்கு திரையிட்டு காட்டிய நிலையில், பலரும் படத்தை பலமாக பாராட்டி வருகின்றனர்.

பெருமை சேர்க்கும்
தமிழ் சினிமாவுக்கே ஜெய் பீம் திரைப்படம் பெருமை சேர்க்கும் என படத்தை பார்த்த பல சினிமா பிரபலங்களும் பத்திரிகையாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருளர் இன மக்களுக்கு நேர்ந்த அநீதியை சந்துரு எனும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள சூர்யா எப்படி நீதி வாங்க போராடுகிறார் என்கிற கதை தான் ஜெய் பீம்.

அடுத்த ஹிட்
கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்தது. அதன் பிறகு நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகிறது. அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி சூரரைப் போற்று எப்படி வெற்றி பெற்றதோ அதே போல ஜெய் பீம் திரைப்படமும் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவுடன் இன்பநிதி
முதல்வர் ஸ்டாலினின் பேரனும் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்துள்ளார். சூர்யாவுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்பநிதி ஷேர் செய்ய அது சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

தியேட்டரில் ரிலீசாகி இருந்தால்
சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் இந்த தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திற்கு திரையரங்குகளில் கடும் போட்டியாக அமைந்திருக்கும் என சூர்யா ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்து வருகின்றனர். நல்ல கருத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என நினைத்து சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் நாளை மறுநாளே மக்கள் பார்வைக்கு ஒடிடி வழியாக கிடைக்கப் போவதும் நல்ல விஷய்மாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











