எனக்கு மட்டும் எப்படி லட்டு, லட்டா ஹீரோயின் அமையுது?: உதயநிதி விளக்கம்
சென்னை:தன் படங்களில் மட்டும் எப்படி நல்ல ஹீரோயின்கள் கிடைக்கிறார்கள் என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தயாரிப்பாளராக கோலிவுட் வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது பிசியான ஹீரோவாகிவிட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் படங்களில் மட்டும் லட்டு, லட்டா ஹீரோயின்கள் நடிக்கிறார்கள் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
இந்நிலையில் சினிமா, அரசியல் குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

நிமிர்
ப்ரியதர்ஷனின் படங்கள் ஒன் மேன் ஷோ. அவருக்கு சினிமா துறையின் அனைத்து விபரங்களும் தெரியும். பிற இயக்குனர்களை போன்று அவர் சீன் ஷீட்டை முந்தைய நாள் இரவே அனுப்பி வைக்க மாட்டார். நிமிர் படத்தை 36 நாட்களில் படமாக்கி முடித்தோம்.

படங்கள்
என் படங்களுக்கான ஹீரோயின்களை நான் அல்ல மாறாக இயக்குனர்களே தேர்வு செய்கிறார்கள். பெரிய ஹீரோயின்கள் நடித்தால் வியாபரத்திற்கு நல்லது. ஆனால் நிமிர் படத்தில் நடித்துள்ள நமீதா பிரமோத் தமிழுக்கு புதுமுகம்.

கிருத்திகா
என் மனைவி கிருத்திகா அவரின் படங்களில் பிசியாக உள்ளார். என் பட விஷயங்களில் தலையிட அவருக்கு நேரம் இல்லை. நான் நடிக்கும் படங்களின் ஸ்க்ரிப்படுகளை கேட்பார்.

தெறி
தெறி படத்தை அடுத்து மகேந்திரன் சாருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. ப்ரியன் சார் கேட்டதால் நிமிர் படத்தில் நடித்துள்ளார். அவர் என் அப்பாவாக நடித்துள்ளார்.

திட்டமில்லை
நான் சிறுபிள்ளையாக இருந்தபோதில் இருந்தே அரசியல்வாதி என்று கூறலாம். நான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன். தாத்தா, அப்பாவின் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டுள்ளேன். நான் ஒரு அரசியல்வாதி தான். ஆயிரம் விளக்கு தொகுதியில் நான் செல்லாத வீடே இல்லை. ஆனால் தற்போது நான் படங்களில் பிசியாக உள்ளேன். இருப்பினும் அரசியலை விட்டு தள்ளியிருக்க மாட்டேன். இதுவரை எதுவும் திட்டமிடவில்லை என்றார் உதயநிதி.


Click it and Unblock the Notifications











