Udhayanidhi stalin - நாங்கள்தான் மாரி செல்வராஜை அடிப்போம்.. உதயநிதி சொன்ன சீக்ரெட்

சென்னை: Udhayanidhi (உதயநிதி) மாரி செல்வராஜ் யாரையும் அடிக்கமாட்டார் நாங்கள்தான் அவரை அடிப்போம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அந்த டீசண்ட் வரவேற்பு கொடுத்த உற்சாகம் உதயநிதியை அடுத்தடுத்த படங்களில் நடிக்க தூண்டியது.அதன்படி அவரும் பல படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இடையில் வந்த மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன.

Udhayanidhi Stalin Talks about mari selvaraj and maamannan

நடிகர் டூ அமைச்சர்: இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார் உதயநிதி ஸ்டாலின். ஒருபக்கம் எம்.எல்.ஏ, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருந்தவருக்கு திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அமைச்சர் பதவி என்பது விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட உதய் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார். அதேசமயம் கடைசி படம் தரமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

மாமன்னன்: எனவே பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதால் தனது கடைசி படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் உதயநிதி.

இசை & ட்ரெய்லர்: படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதில் கமல் ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.எல்.விஜய், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் இடம்பெற்ற ஐந்து சிங்கிள்கள் இதுவரை வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது. படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

நாங்கள்தான் அடிப்போம்: இந்தச் சூழலில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அதனையொட்டி உதயநிதி ஸ்டாலின், வடிவேல், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் பல பேட்டிகளை கொடுத்துவருகின்றனர். அப்படி ஒரு பேட்டியில் பேசும்போது மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடிப்பார் என கூற அது சர்ச்சையாகிவிட்டது. இதனையடுத்து அவர் கொடுத்த மற்றொரு பேட்டியில், அவரெல்லாம் யாரையும் அடிக்க மாட்டார் கடுப்பானால் நாங்கள்தான் அவரை அடிப்போம். மாரி செல்வராஜ் ஒரு குழந்தை போல அவர் சீரியஸாக இருக்க நினைத்தாலும் நாங்கள் இருக்க விட மாட்டோம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X