twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கர்ணன்... அது "தப்பு".. சுட்டிக்காட்டினேன்…2 நாட்களில் சரி செய்யவதாக உறுதி… உதயநிதி ஸ்டாலின் ட்விட் !

    |

    சென்னை : கர்ணன் படத்தில் உள்ள சிறு தவறை சுட்டிக்காட்டி நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழகத்தில் முதல் 3 நாட்களில் 23 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இப்படியாம்மா கதவ சாத்துவாங்க.. கிரண் கொடுத்துருக்க போஸ பாருங்க.. அதிரும் இன்ஸ்டா! இப்படியாம்மா கதவ சாத்துவாங்க.. கிரண் கொடுத்துருக்க போஸ பாருங்க.. அதிரும் இன்ஸ்டா!

    இது தனுஷின் 19 ஆண்டுகளாக திரைவாழ்க்கையில் எந்த ஒரு திரைப்படமும் இந்த சாதனையை பெறவில்லை.

    ஓடிக்கொண்டு இருக்கிறது

    ஓடிக்கொண்டு இருக்கிறது

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் திரைப்படம் கர்ணன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெளியாகி உள்ள இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை ரெஜினா விஜயன், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லால், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    விஜய்சேதுபதி பாராட்டு

    விஜய்சேதுபதி பாராட்டு

    ஏப்ரல் 9ந் தேதி வெளியான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி கர்ணன் எக்ஸெலட் திரைப்படம் என தனது சமூகவலைத்தள பக்கத்தில் பாராட்டி உள்ளார். மேலும், மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, அவரது கையை பிடித்து முத்தமும் கொடுத்துள்ளார்.

    கர்ணன் கொண்டாடப்பட வேண்டியது

    இந்நிலையில் இப்படத்தில் உள்ள சிறு தவறு குறித்து நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி அதிலுள்ள தவற்றைச் சுட்டிக்காண்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்ணன் பார்த்தேன், ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷூக்கும், அண்ணன் விகியேஷன்ஸ், இயக்குனர் வெற்றி மாறன் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

    சரி செய்வதாக உறுதியளித்தனர்

    1995ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன் அந்த தவறை இரு தினங்களில் சரி செய்து விடுகிறோம் என்று உறுதியளித்தனர். நன்றி என தெரிவித்துள்ளார்.

    English summary
    Udhayanidhi Stalin tweet about Karnan Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X