Udhayanidhi Stalin - கடைசி படத்தில் இப்படியா நடக்கணும்.. மாமன்னன் உதயநிதி அப்செட்?

சென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு பெரும் அப்செட் ஏற்பட்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுகிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்றது. அந்த டீசண்ட் வரவேற்பு கொடுத்த உற்சாகம் உதயநிதியை அடுத்தடுத்த படங்களில் நடிக்க தூண்டியது.அதன்படி அவரும் பல படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இடையில் வந்த மனிதன், சைகோ, கண்ணே கலைமானே, நிமிர் உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல பெயரை எடுத்துக்கொடுத்தன.

நடிகர் டூ அமைச்சர்: இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவானார் உதயநிதி ஸ்டாலின். ஒருபக்கம் எம்.எல்.ஏ, மறுபக்கம் நடிப்பு என பிஸியாக இருந்தவருக்கு திடீரென விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அமைச்சர் பதவி என்பது விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்துகொண்ட உதய் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்தார். அதேசமயம் கடைசி படம் தரமாக இருக்க வேண்டும் எனவும் விரும்பினார்.

Udhayanidhi Stalin upset after watching Maamannan Movie

மாமன்னன்: எனவே பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமாகி கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடிக்க கமிட்டானார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதால் தனது கடைசி படம் நிச்சயம் சிறந்த படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் உதயநிதி.

இசை & ட்ரெய்லர்: படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது. அதில் கமல் ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.எல்.விஜய், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலும் படத்தில் இடம்பெற்ற ஐந்து சிங்கிள்கள் இதுவரை வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகவுள்ளது. படம் ஜூன் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

வடிவேலு: மாமன்னன் படத்தில் உதயநிதிதான் ஹீரோ என்றாலும் வடிவேலுதான் மாமன்னன் என படத்தின் போஸ்டர்கள் உணர்த்துகின்றன. அதையே மாரி செல்வராஜும் பல பேட்டிகளில் பேசிவருகிறார். ஆனால் தற்போது அதுவே பெரும் அப்செட்டை உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் புதிய முணுமுணுப்பு ஒன்று எழுந்திருக்கிறது.

என்ன காரணம்?: அதாவது மாமன்னன் படத்தின் ப்ரோமோஷனே இப்போது வடிவேலுவை வைத்துதான் நடந்துகொண்டிருக்கிறது. அது ஒருவகையில் படத்துக்கு ப்ளஸ்ஸும்கூட. அதேசமயம் தனது கடைசி படத்தில் தன்னைவிட வடிவேலுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ என்ற எண்ணம் உதயநிதிக்கு எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மாமன்னன் படத்தை உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பார்த்ததாகவும் அதில் வடிவேலுவின் காட்சிகள் அவருக்கு திருப்தி தரவில்லை. எனவே பெரும் அப்செட்டில் இருக்கிறார் என்றும் புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இந்தத் தகவலில் துளியும் உண்மையில்லை. வடிவேலுவை முன்னிலைப்படுத்துவதில் உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போதுமே உடன்பாடு இருந்திருக்கிறது. ஏனெனில் இவரைவிட அவர் திரைத்துறையில் சீனியர். அதேபோல் வடிவேலுவை மாரி செல்வராஜ் அட்டகாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். அதை பார்த்த உதயநிதி ரொம்பவே திருப்தியில் இருக்கிறார். அதன் காரணமாகத்தான் இசை வெளியீட்டு விழாவில்கூட, 'மீண்டும் நடித்தால் மாரி செல்வராஜின் படத்தில்தான் நடிப்பேன் என்று உறுதி கொடுத்திருக்கிறேன்' என உதயநிதி கூறினார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X