‘ஆர்ட்டிகிள்15‘ படப்பிடிப்பு தளத்தில் விவேக்கின் திருவுருவபடத்திற்கு அஞ்சலி!
சென்னை : இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள்15 என்ற படத்தின் தமிழ் ரீ மேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இதன் படப்பிடிப்புத்தளத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அருண்ராஜா காமராஜன்
கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜன் இப்படத்தை இயக்கி வருகிறார். தல அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை மற்றும் இயக்குனர் ஹெச் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை ஆகிய படங்களை தயாரித்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

உயர்அதிகாரிகளின் ஈகோ
பாலிவுட் நடிகர் அயூஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிகிள்15 தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். ஒரு கொலை வழக்கு தொடர்பான குற்ற விசாரணையின் போது இரண்டு பிரிவைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு இடைய நடைபெறும் ஈகோ மோதலை மற்றும் சாதி மோதலை பின்னணியாக கொண்ட கதையாகும்.

விவேக்கிற்கு அஞ்சலி
இந்நிலையில், உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் ஆர்டிக்கிள் 15 பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப்படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும் சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம் என்று பதிவிட்டு இருந்தார். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில், இயக்குனர் அருண்ராஜா காமராஜன் உள்ளிட்டபடக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

தீவிர பிரச்சாரம்
உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











