'பாயும் புலி' சுசீந்திரனுடன் கைகோர்க்கும் 'கெத்து' உதயநிதி
சென்னை: உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக இயக்குநர் சுசீந்திரனின் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத் தகுந்த இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன். சமீபத்தில் பாயும் புலி படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியை வைத்துப் படமெடுக்கிறார் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் நடித்து வரும் ஜாலி எல்எல்பி பட ரீமேக்கைத் தொடர்ந்து சுசீந்திரனின் படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் என்று கூறுகின்றனர். இந்தப் படம் தொடர்பான எல்லாவற்றையும் இறுதி செய்தபின்னர் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று உதயநிதி எண்ணியிருக்கிறாராம்.
அநேகமாக மார்ச் மாதத்திற்குள் ஜாலி எல்எல்பி ரீமேக் படப்பிடிப்பு முடிந்து விடும் என்பதால், மார்ச் முதல் படப்பிடிப்பைத் தொடங்க இருவரும் முடிவு செய்துள்ளனராம்.
உதயநிதி தற்போது கெத்து படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீடு வருகின்ற 25 ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











