»   »  உதயநிதி படத்துக்கு ரஜினி படத் தலைப்பு வைத்தது ஏன்? டைரக்டர் சொல்லும் விளக்கம்!

உதயநிதி படத்துக்கு ரஜினி படத் தலைப்பு வைத்தது ஏன்? டைரக்டர் சொல்லும் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜீத் தொடங்கி நேற்று நடிக்க வந்த புதியவர்கள் வரை ரஜினி படத் தலைப்புகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

'கெத்து' படத்தை அடுத்து உதயநிதி நடிக்கும் புதிய படத்துக்கு மனிதன் என்று தலைப்பிட்டுள்ளனர்.


Udhayanidhi too using Rajini movie title for his next

இந்தியில் சூப்பர் ஹிட்டான ‘ஜாலி எல்.எல்.பி' படத்தின் ரீமேக் இது. இதில் உதயநிதிக்கு ஜோடியாக மீண்டும் ஹன்சிகா நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அஹ்மத் இப்படத்தை இயக்கி வருகிறார்.


மனிதன் படம் எண்பதுகளில் வெளியான ரஜினியின் ப்ளாக்பஸ்டர் படம். ஏவிஎம் தயாரித்திருந்தது.


உதயநிதி படத்துக்கு ஏன் ரஜினியின் தலைப்பு என்று கேட்டதற்கு, இயக்குநர் அஹமது கூறுகையில், "இந்த படத்தின் கதாநாயகன் ஆரம்பத்தில் பல தவறுகள் செய்பவராகவும், பின்னர் மனம் திருந்தி நல்ல மனிதனாக மாறுவதுதான் கதை. அதனால்தான் மாக கதையை உருவாக்கியிருக்கிறோம். இதன் காரணமாக இந்த படத்திற்கு 'மனிதன்' என்ற தலைப்பு வைத்தோம். தால் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கருதி இந்த தலைப்பை வைத்திருக்கிறோம்


இந்தத் தலைப்பை வைப்பதற்காக, ரஜினியின் 'மனிதன்' படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி வாங்கியிருக்கிறோம்," என்றார்.

English summary
Udhayanidhi Stalin's new movie has been titled as Manithan. Remember, Manithan is Rajinikanth's blockbuster movie title.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos