Maamannan Day 2 collection: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மாமன்னன்.. இரண்டாம் நாள் வசூல் நிலவரம்!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் மாமன்னன். சமூகத்தில் இருக்கும் சாதி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மாமன்னன்.
நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகை அன்று வெளியானது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த பாசிடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
மாமன்னன்: மாமன்னன் இசைவெளியிட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ் தேவர்மகன் படம் தன்னை பாதித்தாக பேசிஇருந்தார், மேலும்,அப்படத்தில் வரும் இசக்கி கதாபாத்திரம்தான், மாமன்னன் என்று மாரி செல்வராஜ் தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் முன்நிலையில் மாரிசெல்வராஜ் பேசியது சர்ச்சைக்குள்ளாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இது படத்தை பாதிக்கும் என்று கருதப்பட்டத்தை வெளியீட்டுக்கு முன்பாக கமலை ,உதயநிதி,மாரிசெல்வராஜ் சந்தித்து நன்றி கூறினார்.

2ம் நாள் வசூல்: உலக அளவில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியான மாமன்னன் திரைப்படம், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 7 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.மேலும், உலக அளவில் 8.5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் நாள் வசூல் 4 முதல் 5 கோடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாமன்னன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அடுத்து வரும் வார விடுமுறை நாட்களில் கூடுதலாக வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நல்ல நடிப்பு: ஃபகத் பாசில் மற்றும் வடிவேலுவின் நடிப்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. உதயநிதியின் சினிமாவில் வாழ்க்கையில் மாமன்னன் திரைப்படம் ஒரு பெஸ்ட் திரைப்படமாக அமைந்துள்ளது. தனது கடைசிப்படத்தை நல்ல படமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார். படம் முழுவதும் புரட்சி கருத்துடைய பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பயம் இருந்தது: மேலும்,மாமன்னன் படத்தை திரையரங்கில் மக்களோடு மக்களாக பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், இந்த படம் 100 சதவீதம் வெற்றியை கொடுத்துருக்கு. இந்த கதையை படமாக எடுக்க முடியாது என்ற பயம் எனக்குள் இருந்தது. உதயநிதியிடம்கதையை சொன்னவுடன் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமில்லாமல், இக்கதையை விரிவுபடுத்தவும், மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் நான் கேட்ட அனைத்தையும் செய்து கொடுத்தார். உதயநிதிக்கு நன்றி கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











