Lover first review: லவ்வர் முதல் விமர்சனம்..ரகசியத்தை கசிய விட்ட உதயநிதி.. மணிகண்டன் குஷி!

சென்னை: நல்ல தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் மணிகண்டன் நடிப்பில் பிப்ரவரி 9ந் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் லவ்வர். இந்த படத்தில், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் விமர்சனம் இணையத்தில் தற்போது கசிந்துள்ளது.

ஞானவேல் ராஜா இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன் நடித்த திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் மணிகண்டன் ராசாகண்ணு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டரில் மணிகண்டனின் எதார்த்தமான நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்தை தொடர்ந்து, மணிகண்டன் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு குட்நைட் திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

Udhayanidhi who watched lover movie, praised the film

லவ்வர் திரைப்படம்: குட் நைட் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டீசர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பாராட்டிய உதயநிதி: இப்படம் வரும் 9ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை அமைச்சரும், நடிகருமான உதயநிதி பாராட்டியுள்ளதாக லவ்வர் பட நாயகன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உங்களுடைய வாழ்த்தை தொலைப்பேசி வாயிலாக பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. எங்களுடைய லவ்வர் படத்தை நீங்கள் விரும்பி ரசித்தீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். என்னை போன்ற வளரும் கலைஞர்களின் நடிப்பு விரிவாக பாராட்டப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் அடுத்தடுத்து இதுபோன்ற கதாபாத்திரங்களை செய்ய உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நல்ல படங்களை பாராட்டி வரும் உதயநிதி லவ்வரையும் பாராட்டியுள்ளதால், இப்படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Udhayanidhi who watched lover movie, praised the film

இளைஞர்களுக்கு பிடிக்கும்: அதே போல லவ்வர் படம் பார்த்த விநியோகஸ்தர் ஒருவர், தனது எக்ஸ் தள பக்கத்தில், லவ்வர் படத்தை நான் பார்த்து ரசித்தேன். படத்தில் அவ்வளவு அழகான காதல் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இன்றயை காலத்து இளைஞரகளுக்கு இந்த திரைப்படம் கண்டிப்பாக பிடிக்கும். மணிகண்டனின் அசாதாரணமான நடிப்பு ஒவ்வொரு காட்சிகளையும் பார்க்க தூண்டுகிறது என பதிவிட்டு இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X