உதயநிதி ஸ்டாலின் மிரட்டும் சைக்கோ டீசர் அக்டோபர் 25ல் வெளியீடு
சென்னை: மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் சைக்கோ படத்தின் டீசர் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இது பற்றி அறிவிப்பை ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.
மிஸ்கின் கடைசியாக துப்பறிவாளன் படத்தை நடிகர் விஷாலை வைத்து இயக்கி இருந்தார். அந்த படம் விஷாலுக்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. மிஸ்கின் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் மற்றும் சுட்டு பிடிக்க உத்தரவு படங்களில் நடித்து இருந்தார். அதோடு சவரக்கத்தி என்ற திரைப்படத்தில் கதை எழுதி நடிக்கவும் செய்திருந்தார். சவரக்கத்தி படத்தை இயக்கி இருந்தார் ஜி.ஆர்.ஆதித்யா.

மிஸ்கின் ஒரு பன்முகத் திறமை கொண்டவர். இயக்குனர், நடிகர்,,எழுத்தாளர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு வகையான விஷயங்களை செய்து வருகிறார். .இவர் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினை புதிய படம் இயக்கி வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் கடைசியாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார். அதற்கு முன் ப்ரியதர்சன் இயக்கத்தில் மகேஷிண்ட பிரதிகாரம் என்ற மலையாள பட ரீமேக்கான நிமிர் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது, மிஷ்கின் உதயநிதியை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு சைக்கோ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் அதிதி ராவ், கைதாரி, நித்யா மேனன், ராம் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.
மகிழ் திருமேனியின் ஆக்சன் திரில்லர் படம் - உதயநிதிக்கு ஜோடியாகும் மேகா ஆகாஷ்
இளையராஜாவும் மிஷ்கினும் இதற்கு முன் நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதற்கு பிறகு தற்போது, இந்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த படத்தின் டீசர் 5 நாட்களில் வெளிவரப்போவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான டபுல் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் டீவிட்டரில் கூறியுள்ளது.
அதாவது படத்தின் டீசர் அக்டோபர் 25ஆம் நாள் வெளியாகப்போகிறது. சமீப காலங்களில் உதயநிதி ஸ்டாலின் நல்ல கதையம்சம் கொண்ட படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சைக்கோ படமும் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











