உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!
சென்னை: உதயநிதி ஸ்டாலின் தனது மகனுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிநி ஸ்டாலின் நடிகராகவும் திமுக இளைஞரணி செயலாளராகவும் உள்ளார்.
அரசியலில் தீவிரமாக உள்ள உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிப்பதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

வைரலாகும் போட்டோ
டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என துடிப்பாக உள்ள உதயநிதி ஸ்டாலின் தனது அரசியல் தொடர்பான விஷயங்கள் மட்டுமின்றி சினிமா சார்ந்த விஷயங்களையும் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோளில் கையைப்போட்டு
அதாவது உதயநிதி ஸ்டாலின் தனது மகன் இன்பநிதியுடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் அப்பாவும் மகனும் தோளில் கையைப் போட்டப்படி எதையோ சீரியஸாக பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர்.

அண்ணன் தம்பி போல்..
இதனை பார்த்த ரசிகர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா என கேட்டு பெருமூச்சு விட்டு வருகின்றனர். மேலும் பல நெட்டிசன்கள் அண்ணன் தம்பி போன்று இருக்கிறீர்கள், அப்பா மகன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என கூறி வருகின்றனர்.

இரண்டு பிள்ளைகள்
உதயநிதி ஸ்டாலின் 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உள்ளனர். கிருத்திகா உதயநிதி தமிழ் சினிமாவில் இயக்குநராக உள்ளார். வணக்கம் சென்னை, காளி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











