மோடி, தமிழிசை, குருமூர்த்தி: இந்த உதயநிதி செய்த வேலையை பார்த்தீங்களா?
சென்னை: உதயநிதி ஸ்டாலின் போட்டுள்ள ஒரு ட்வீட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ராம் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா உள்ளிட்டோர் நடித்துள்ள பேரன்பு படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தந்தை, மகள் இடையேயான உறவை படத்தில் அழகாக காட்டியுள்ளாராம் ராம்.
தங்க மீன்கள் போன்று இந்த படமும் நிச்சயம் அனைத்து அப்பாக்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தை சென்னை, செங்கல்பட்டு, சேலத்தில் வினியோகிக்கும் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் பெற்றுள்ளது.
மோடி
பேரன்பு படத்தை விளம்பரம் செய்து உதயநிதி போட்ட ட்வீட் வித்தியாசமாக உள்ளது. காரணம் அந்த ட்வீட்டில் தொடர்பே இல்லாமல் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி ஆகியோரை மென்ஷன் செய்துள்ளார்.
பாஜக
பேரன்பு படத்திற்கு ப்ரொமோஷனை உதயநிதி பெரிய லெவலில் துவங்கிவிட்டார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. பாஜகவிடம் இருந்து விளம்பரம் கிடைத்தால் படத்திற்கு நல்லது தானே.
ஹெச். ராஜா
உதயநிதி ஸ்டாலினின் ட்வீட்டை பார்த்தவர்கள் அய்யோ ப்ரோ, ஹெச். ராஜாவை மறந்துவிட்டீர்களே. அவர் தான் இலவச விளம்பரம் செய்வதில் வல்லவர் என்று கிண்டல் செய்துள்ளனர்.
குசும்பு
உதயநிதி ஸ்டாலின் செய்தது குசும்பு என்றும், இது இது தான் தரமான சம்பவம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உதயநிதியின் தைரியத்தையும் பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











