லியோவின் எல்சியூ கனெக்ட்.. அப்போ லியோ தாஸுக்கும் ரோலக்ஸுக்கும் எண்ட் கேமில் சண்டை உறுதி?

சென்னை: ரோலக்ஸுக்கும் டில்லிக்கும் இடையே விக்ரம் 3ல் சண்டை நடக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக லியோ தாஸுக்கும் ரோலக்ஸுக்கும் இடையே சண்டை நடக்கும் என தற்போது ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

ஒரு வருஷமா லோகேஷ் கனகராஜ் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை நேற்று நள்ளிரவு உதயநிதி ஸ்டாலின் போட்ட ஒரே ட்வீட்டில் சல்லி சல்லியா நொறுக்கி விட்டாரே என விஜய் ரசிகர்கள் கேங்ஸ்டர் என்றால் டிசிப்ளீன் வேண்டும் என கலாய்த்து வருகின்றனர்.

மேலும், லியோ எல்சியூ என்பது கன்ஃபார்ம் ஆன நிலையில், விஜய்சேதுபதி, கமல்ஹாசன், பகத் ஃபாசில் அல்லது சூர்யா என இதில் யாருடைய கேமியோவை எதிர்பார்க்கலாம் என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Udhaynidhi reveals Leo is LCU then Rolex and Leo Das fight will happen in End Game?

லியோ எல்சியூ: 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படம் என அவர் அறிவிக்கும் போதே இது ஸ்டாண்ட் அலோன் படமல்ல எல்சியூ தான் என்கிற டவுட் எழுந்தது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டை வைத்து பார்த்தால் இது பக்கா எல்சியூ படம் என்பது தெளிவாகி உள்ளது. ஹிஸ்டர் ஆஃப் வயலென்ஸ் படத்தின் உரிமையை வாங்கி விட்டு அதை எல்சியூவில் இணைத்து விட்டாரா லோகேஷ் என்கிற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.

எல்சியூ கனெக்ட்: சத்யா எனும் பெயரில் த்ரிஷா இருப்பதை வைத்தே லியோ எல்சியூவாக இருக்கும் என்றும் ஜார்ஜ் மரியம் கதாபாத்திரம் மற்றும் ஏஜென்ட் டினா உள்ளிட்டோர் லியோவில் இணைந்த நிலையில், எல்சியூ என ரசிகர்கள் குறிப்பிட்டதை போலவே தற்போது லியோ எல்சியூ தான் என்பது தெளிவாகி உள்ளது.

ரோலக்ஸ் - லியோ தாஸ் சண்டை: விக்ரம் 2 படத்துடன் எல்சியூ நிறைவடையும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ள நிலையில், டில்லி 2 அல்லது ரோலக்ஸ் படத்தில் கார்த்தி மற்றும் சூர்யா இடையே சண்டை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக விக்ரம் 3 எண்ட்கேமில் ரோலக்ஸுக்கும் லியோ தாஸ் விஜய்க்கும் இடையே தான் பிரம்மாண்ட சண்டை நடைபெறும் என்றும் மற்ற முன்னணி நடிகர்களான கமல், கார்த்தி, பகத் ஃபாசில் என பலரும் அதில் பங்கேற்க வாய்ப்புகள் அதிகம் என்றும் ரசிகர்கள் கற்பனை குதிரைகளை தட்டி விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X