twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உத்தா பஞ்சாபுக்கு வக்காலத்து வாங்குவோர் உள்ளூர் படத்தைக் கண்டுக்கலியே!

    By Shankar
    |

    நேற்று சென்னை பிலிம்சேம்பரில் ஒரு அவசரக் கூட்டம். அதையொட்டி 'பிரஸ் மீட் இருக்கிறது வாங்க' என்று ஒரு வாட்ஸ்ஆப் அழைப்பு. போனால், 'யார் வரச் சொன்னது... ஏன் வந்தீங்க.. போங்க போங்க' என ஒரு கூட்டம் விரட்ட, இன்னொரு கூட்டம் நாங்கதான் வரச்சொன்னோம் என்றது.

    ஆக ரெண்டுபட்டுக் கிடக்கிறது தயாரிப்பாளர் சங்கம். நடிகர் சங்கத்தைப் பிடித்த மாதிரியே தயாரிப்பாளர் சங்கத்தையும் மீடியா துணையுடன் கைப்பற்ற முயற்சி நடப்பதாக வந்த தகவல்கள் கண் முன்னே நிஜமாக நடப்பது புரிந்தது.

    Udta Punjab piracy issue: Section of producers unhappy on Council

    கிடக்கட்டும்... அது தயாரிப்பாளர்களின் கோஷ்டி மோதல்.

    நேற்றைய சிறப்புக் கூட்டம் எதற்காகத் தெரியுமா? சமீப காலமாக பரபரப்பைக் கிளப்பிய உத்தா பஞ்சாப் என்ற இந்திப் படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகும் முன்பே திருட்டு வீடியோவாக வந்துவிட்டதாம். அதைக் கண்டிக்கும் வகையிலும், இனி இதுபோன்று திருட்டு வீடியோ வராமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் பேசப்பட்டதாம்.

    இது நல்ல விஷயம்தான். யாரும் மறுக்கவில்ல. ஆனால் எங்கோ ஒரு இந்திப் படத்துக்கு நேர்ந்ததற்காக இங்கே வருத்தப்படும் விஷால் அன்ட் கோ, தமிழ்நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு தினம் தினம் இந்த திருட்டு சிடி - வீடியோ பிரச்சினை இருப்பதை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையே. பஸ் பஸ்ஸாக சிடியைப் பிடித்ததாக அறிக்கை மட்டும்தானே அப்போது விட்டார் விஷால்?

    மாப்ள சிங்கம் என்ற படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பே திருட்டு வீடியோவாக வந்துவிட்டது.

    "சமீபத்தில் படங்கள் இறைவி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நேற்று வெளியான முத்தின கத்திரிக்கா உள்பட புதுப் படங்கள் தியேட்டருக்கு வரும் முன்பே திருட்டு வீடியோவாக வந்துவிடுகின்றன.

    ஆனால் அதை ஒரு பேசுபொருளாக எடுக்கவில்லை இந்த தயாரிப்பாளர் சங்கம் அல்லது திருட்டு வீடியோ ஒழிப்பைக் கையிலெடுத்துள்ள விஷால் அன்ட். உத்தா பஞ்சாபுக்காக இவ்வளவு வக்காலத்து வாங்கும் சங்கத்தினர், ஒப்புக்குக் கூட ஒரு தமிழ்ப் படத்தின் பெயரைக் கையிலெடுத்தார்களா?" என்று கொந்தளிக்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

    போராட்டம் சரியாகவே இருந்தாலும், யாருக்காக போராடுகிறோம் என்பது முக்கியமல்லவா... தமிழ் சினிமாவை பைரசி முற்றாகக் கொல்வதற்குள் ஏதாவது செய்யப் பாருங்கள்!

    English summary
    A section of producers criticised Vishal and other producer council members for their urgent meet to discuss on Udta Punjab video piracy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X