என்ன சொல்றீங்க… KGF 2 எடிட்டருக்கு 19 வயசு தானா?...தெறிக்கவிட்டு இருக்காரே!
சென்னை : கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் எடிட்டர் குறித்த சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷின் வெறித்தனமாக நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளத் திரைப்படம் கேஜிஎஃப் 2.
பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

காத்திருந்தனர்
கேஜிஎஃப் முதல் பாகம் வெளியான போதே ஒட்டுமொத்த உலகத்தையும் தனது அசாத்திய நடிப்பால் திரும்பிபார்க்கவைத்தவர் யாஷ். கன்னட நடிகராக இருந்த போதும், மொழி வேறுபாடு இல்லாமல் அனைத்து மொழிபேசும் ரசிகர்களின் மனதில் ராஜாவாக அமர்ந்துவிட்டார் யாஷ். கேஜிஎஃப் 2 எப்போது வெளியாகும் காத்துக்கொண்டிருந்தனர் யாஷின் தீவிரரசிகர்கள்.

ஒருகுறையும் இல்லை
கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இத்திரைப்படம் கொரோனா காரணமாக தமிழ் புத்தாண்டு நாளான இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். கேஜிஎப் படத்தை ஒரு குறையும் சொல்ல முடியாதபடி இசை,ஸ்கின்ப்ளே, எடிட்டிங் என அனைத்தும் பக்காவாக இருந்தாக ரசிகர் படத்தை பற்றி நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

யாஷ் நான் பிளஸ்
இந்த திரைப்படத்தில் யாஷை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு வெற்றி பெற்று இருக்காது, இந்த படத்திற்கு பிளஸ் யாஷ் தான். ஒட்டுமொத்த கதையையும் தூக்கி நிறுத்தி, படத்திற்கு வலுசேர்ந்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டி படத்தை மேலும் அழகாக்கி உள்ளார் இயக்குநர் பிரசாத் நீல்.

19 வயதுதானா?...
கேஜிஎப் 2 திரைப்படத்தை காட்சிக்கு காட்சி ரசித்து ரசித்து எடிட் செய்த எடிட்டரை அனைவரும் பாராட்டி வரும் இந்த நேரத்தில் எடிட்டர் குறித்த சுவாரஸ்யமானத் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், இப்படத்தின் எடிட்டர் உஜ்வல் குல்கர்னிக்கு வெறும் வயது 19 தானாம். இந்த சிறு வயதிலேயே உலகமே திரும்பி பார்க்கும் திறமை மிக்கவராக இருக்கிறார் உஜ்வல்.

குவியும் பாராட்டு
கேஜிஎப் பிரியரான உஜ்வல் குல்கர்னி கேஜிஎப்-1 படத்தை ஷாட்டாக எடிட் செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த இயக்குநர் பிரசாத் நீலின் மனைவி உஜ்வலின் எடிட்டிங்கை பார்த்து வியந்து கணவரிடம் காண்பித்துள்ளார். இதையடுத்தே கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு உஜ்வல் குல்கர்னி எடிட்டராகி உள்ளார். 19 வயதே ஆன உஜ்வல் குர்கர்னியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











