Parasakthi Uncut Version: பராசக்தி அன்கட் வெர்ஷன்.. பார்க்கப்போகும் கொடுத்து வைத்த ரசிகர்கள் யார் தெரியுமா?
சென்னை: சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் பராசக்தி. 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மொழிப்போர் அதாவது, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கு மொத்தம் 25 கட்கள் சென்சார் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், படத்தில் ஒரு கட் கூட இல்லாமல் படத்தை பார்க்கும் வாய்ப்புகளும் குறிப்பிட்ட சில ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது தொடர்பாக படக்குழுவே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பராசக்தி படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொடக்கத்தில் படத்திற்கு சென்சார் கிடைப்பதில் இருந்த சிக்கலின் போது, சில தகவல்கள் இணையத்தில் பரவியது. அதாவது சென்சார் சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்கள் வரை சொன்னதாகவும், அதனால் தான் படக்குழு ரிவைசிங் கமிட்டிக்கு சென்றதாகவும் கூறப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது டிரைலரில் இடம் பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து, வரவேற்பைப் பெற்ற, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை காட்சிகளை படத்தில் இருந்து மொத்தமாக நீக்க வேண்டும் என்று சென்சார் தரப்பில் தெரிவித்துள்ளனர். அந்த காட்சிகளை நீக்கிவிட்டு வந்தால் சென்சார் தருகிறோம் என்று தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

கலைஞர் கருணாநிதி: பராசக்தி படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்து இந்த படம் திமுகவின் படம், இந்த படம் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுக்கு குறைந்தபட்ச உதவியைச் செய்யும் என்று எல்லாம் கருத்துகள் பரவி வந்தது. அதனால் தான் மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கதை, திரைக்கதையில் உருவான படமான பராசக்தி படத்தின் டைட்டிலை பெற்றுள்ளார்கள் என்று எல்லாம் தகவல் வெளியானது.
பேரறிஞர் அண்ணாதுரை: படத்தின் டிரைலர் வெளியாகும் போது, பேரறிஞர் அண்ணாதுரை மொழிப்போர் தொடர்பாக நடைபெற்ற ஒரு போராட்டம் குறித்து தனது கருத்து சொல்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அதாவது, " நாங்கள் இதற்கு பின்னால் இல்லை.. ஆனால் இதை யார் செய்திருந்தாலும் அவரும் என் தம்பியே" என்று அண்ணா கூறுவது போல இருக்கும். இந்த காட்சிக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்பது, திமுகவைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெருமளவு கிடைத்தது. இப்படி இருக்கையில் பேரறிஞர் அண்ணா தொடர்பான காட்சிகளை சென்சார் போர்டு நிறுவனம் நீக்கச் சொல்லி இருப்பது படக்குழுவுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அன்கட் வெர்ஷன்: இந்நிலையில் படத்தில் ஒரு கட் கூட இல்லாமல் படம் பார்க்கும் வாய்ப்பை இங்கிலாந்து நாட்டில் படம் பார்க்கும் ரசிகர்கள் பெறுவார்கள் என்றும், அங்குதான் படத்தில் ஒரு கட் கூட இல்லாமல் திரையிடப்படுகிறது என்றும் பகிர்ந்துள்ளது. இந்த தகவலை வைத்துப் பார்க்கும்போது இங்கிலாந்தில் பராசக்தி படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் படத்தில் ஒரு கட் கூட இல்லாமல் படத்தை பார்ப்பார்கள் என்பது தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications











