அசீம் பற்றி மைனா நந்தினி சொன்னது சரியா போச்சு… உலக மகா நடிப்புடா சாமி… விளாசும் நெட்டிசன்கள்!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் ராஜா - ராணி, பிபி ரோஸ்ட் என இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
அதில், பிபி ரோஸ்ட் என்ற நிகழ்ச்சியில் அசீமை மைனா நந்தினி ரோஸ்ட் செய்ததது ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், அசீம் பற்றி மைனா நந்தினி ரோஸ்ட் செய்தது எல்லாமே உண்மை தான் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சர்ச்சை நாயகன் அசீம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்ந்து சக போட்டியாளர்களின் சண்டைகளுடன் தான் நகர்ந்து வருகிறது. முக்கியமாக சீரியல் நடிகர் அசீமின் அட்ராசிட்டி தொடர்கதையாகி வருகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர் வெளியேறிவிட்டனர். எஞ்சியிருக்கும் 16 போட்டியாளர்களுடன் இந்த வாரம் ராஜா - ராணி போட்டியும், பிபி ரோஸ்ட் டாஸ்க்கும் நடந்து முடிந்தன. அதில் பிபி ரோஸ்ட் டாஸ்க்கில் அசீமை, மைனா நந்தினி வேறலெவலில் வறுத்தெடுத்தார்.

நெட்டிசன்கள் ட்ரோல்
ரோஸ்ட் பண்லாமா வேண்டாமா என ராப் சாங் ஸ்டைலில் அசீமை சீண்டிய மைனா நந்தினி, அசீம் எங்கெல்லாம் கேமரா இருக்கு என பார்த்து வைத்துவிட்டு அதற்கு ஃபோக்கஸ் கொடுப்பதையே வேலையாக வைத்திருப்பதாக ரோஸ்ட் செய்தார். கேமரா எப்போதும் தன்னை ஃபோக்கஸ் செய்துகொண்டே இருக்க வேண்டும் என உஷாரா இருப்பதில் அசீம் தான் நம்பர் ஒன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அசீமை மைனா நந்தினி ரோஸ்ட் செய்தது ரொம்ப சரியானது என நெட்டிசன்களும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

ராஜா ராணி டாஸ்க்கில் மோதல்
ராஜா ராணி டாஸ்க்கில் அரசின் கஜானாவை நிரப்பும் சீக்ரெட் டாஸ்க் அசீமுக்கும் ரச்சிதாவுக்கும் கொடுக்கப்பட்டது. அதில், அசீம் சார்பாக கதிர் ரகசியமாக கேம் விளையாடி அருங்காட்சியகத்தில் இருந்த பொருட்களை திருடு குகையில் சேர்த்தார். அப்போது படைத் தளபதியான அசீமுக்கும் ராஜகுருவான விக்ரமனுக்கும் இடையே முதலில் சண்டை ஏற்பட்டது. அதன்பின்னர் அசீமுக்கும் ஏடிகேவுக்கும் நடந்த சண்டையால் பிக் பாஸ் வீடே அதிர்ந்துப் போனது. இறுதியாக ராஜா ராணி போட்டியில் நடந்த சீக்ரெட் டாஸ்க் இதுதான் என பிக் பாஸ் போட்டுக் காட்டியதும் எல்லாமே தலை கீழாகப் போனது.

கேமரா முன் கண்ணீர் விட்ட அசீம்
ராஜா ராணி டாஸ்க்கில் கொடுக்கப்பட்ட சீக்ரெட் அசைமெண்ட்டால் அசீம் பலரிடமும் சண்டை போட்டார். இறுதியாக உண்மை தெரிந்ததும் தனியாக கேமரா இருக்கும் இடம் பார்த்து படுத்திருந்த அசீம், குலுங்கி குலுங்கி அழுதார். போட்டியாளர்கள் எப்போது பாத்ரூம் சென்று அழுவதையே வழக்கமாக வைத்திருக்கும் நிலையில், அசீம் வேண்டும் என்றே கேமரா முன்பு அழுது நாடகமாடுகிறார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல், மைனா நந்தினி சொன்னது மாதிரி தான் அசீம் நடந்துகொள்வதாகவும், கேமரா முன்பு அழுவதை போல நடித்து மக்களை ஏமாற்றுவதாகவும் ட்ரோல் செய்து வருகின்றனர். அசீம் கேமரா முன்பு அழும் வீடியோக்களையும் ஏராளமான கேப்ஷன்களுடன் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











