சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் ஆடியோ வெளியீடு... நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பு!

சென்னை : நடிகர் அசோக்செல்வன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள்.

விஷால் வெங்கட் இயக்கியுள்ள இந்த படத்தில் நாசர், கேஎஸ் ரவிக்குமார், பானுப்பிரியா போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டார்.

 சில நேரங்களில் சில மனிதர்கள் படம்

சில நேரங்களில் சில மனிதர்கள் படம்

நடிகர் அசோக்செல்வன், அனுஹாசன், ரித்விகா, நாசர், கேஎஸ் ரவிக்குமார், பானுபிரியா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். கடந்த 1976ல் லட்சுமி நடிப்பில் வெளியான படத்தின் டைட்டிலை இந்த படம் கொண்டுள்ளது.

அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்

அதிர்வலைகளை ஏற்படுத்திய படம்

லட்சுமி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான பழைய படம் அந்த காலகட்டத்தில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ராதன் இசையமைத்துள்ளார்.

ஏஆர் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு

ஏஆர் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு

ஏஆர் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் அஜ்மல்கான் மற்றும் பிரியா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு சினேகன் மற்றும் மிர்ச்சி சிவா பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. விரைவில் படம் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டார்.

ட்ரெய்லரை வெளியிட்ட கமல்

ட்ரெய்லரை வெளியிட்ட கமல்

மேலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். ட்ரெய்லரை வெளியிடுவதில் உவகை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படம் வெற்றி பெறவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X