twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "உலகம் சுற்றும் வாலிபன் " டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் ரிலீஸ் ... எம். ஜி. ஆர் ரசிகர்கள் குஷி !

    |

    சென்னை: அன்றைய காலகட்டத்தில் பல தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன் புதிய தொழில் நுட்பத்துடன் மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட, பெரும் திருப்பத்தின்போது வெளியான படம், உலகம் சுற்றும் வாலிபன். தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க., துவங்கிய பின், இப்படம், அக்கட்சி கொடியுடன் படம் வெளியானது.

    சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!சம்மரில் வெளிவரவுள்ள விஜய்சேதுபதியின் 4 படங்கள்!

    இப்படத்தல், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலை பிடித்து, அதை ஆக்கபூர்வ பணிக்கு பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், 'பார்முலா'வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். இதை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ, எதிரிகளின் சதித்திட்டத்தை முறியடிக்கிறார் என்பது தான் கதை.

     மூன்று கதாநாயகியர்

    மூன்று கதாநாயகியர்

    முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர்., ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என, மூன்று கதாநாயகியர். நாடு, நாடாக பயணிக்கும் சர்வதேச கதை, அதை திறமையாக கையாண்டு இருப்பார் இயக்குனர் எம்.ஜி.ஆர்.

    அனைத்து பாடல்களும்

    அனைத்து பாடல்களும்

    விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர், பாடல்களை எழுதினர். 'நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், பச்சைக்கிளி முத்துச்சரம், நிலவு ஒரு பெண்ணாகி, சிரித்து வாழ வேண்டும்' உட்பட அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

    தமிழகம் முழுவதும்

    தமிழகம் முழுவதும்

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பார்த்தால், எம்.ஜி.ஆர், எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் சவுண்டுடன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிலிம்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.

    ரசிகர்களும் பக்தர்களும்

    ரசிகர்களும் பக்தர்களும்

    தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் இந்த படம் சரியான நேரத்தில் ரீலீஸ் ஆகிறது என்பது பலரின் கருத்து. எவர்க்ரீன் படங்களை எப்படி எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு தனி சாமர்த்தியம். எம் ஜி ஆர் ரசிகர்களும் பக்தர்களும் இன்னமும் எம் ஜி ஆர் படங்களை கொண்டாடி தான் வருகிறார்கள். ஒவ்வொரு வசனமும் தத்துவ பாடல்களும் பல மாற்றம் செய்யும் என்ற நம்பிக்கையில் இன்னும் பல எம் ஜி ஆர் படங்களை ரீ ரீலீஸ் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.

    English summary
    Ulagam Sutrum Valiban Digital version to be release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X