twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் பிரகாஷ் இயக்கத்தில், இளையராஜா இசையில் “உலகம்மை"

    |

    சென்னை: காதல் FM, குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் பிரகாஷ் தற்போது SVM புரொடக்‌ஷ்ன்ஸ் சார்பாக V.மகேஷ்வரன் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

    "உலகம்மை" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் 96, மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

    அஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள் அஜித் பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்...கொண்டாடும் தல ரசிகர்கள்

    வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, G.M.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    நெல்லையில் நடக்கும்

    நெல்லையில் நடக்கும்

    1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை "உலகம்மை". பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பது இப்படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    நாவலை தழுவி

    நாவலை தழுவி

    சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.நாவலை தழுவி எடுக்கும் பல கதைகள் மிக பெரிய வெற்றி அடைந்ததை நாம் தமிழ் சினிமாவில் பார்த்து இருக்கிறோம் .அதே சமயம் சரியாக சொல்ல வில்லை என்றால் ரசிகர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்

    மெல்லிய இசை மூலம்

    மெல்லிய இசை மூலம்

    இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா கூட்டணி சேர்ந்தது மிக பெரிய பாக்கியமாக இந்த ஒட்டு மொத்த குழுவும் கருதுகிறது .பல புதிய இசை கருவிகளுடன் தனது மெல்லிய இசை மூலம் தமிழ் மனம் மாறாமல் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இசையாக இருக்கும் என்று பலரும் கருத்து சொல்லி வருகின்றனர் .

    Recommended Video

    A. M. RAJA வின் சிஷ்யர்தான் ILAYARAJA | Mrs. Hemalatha | Rewind Raja Ep - 47 | Filmibeat Tamil
    திறமை மிக்க

    திறமை மிக்க

    இந்த படத்தின் இயக்கம் - விஜய் பிரகாஷ், தயாரிப்பு - V.மகேஷ்வரன் (SVM புரொடக்‌ஷ்ன்ஸ்), இசை - இசைஞானி இளையராஜா, கதை (நாவல்) - சு.சமுத்திரம், ஒளிப்பதிவு - K.V.மணி, வசனம் - குபேந்திரன்

    திரைக்கதை - சரவணன், கலை - வீரசிங்கம், படத்தொகுப்பு - ஜான் அப்ரஹம், உடைகள் - ஜெயபாலன்
    ஒப்பனை - பாரதி, மக்கள் தொடர்பு - சதிஷ் என்று தமிழ் சினிமாவில் மிகவும் அனுபவம் வாய்ந்த டெக்னீசியன்ஸ் மற்றும் திறமை மிக்க சினிமா கலைகனர்கள் சேர்ந்து இந்த படத்தில் வேலை செய்து உள்ளானர் .

    நேர்த்தியான கதாபாத்திரம்

    நேர்த்தியான கதாபாத்திரம்

    நடிகை கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பு செய்து உள்ளார் . மிகவும் அழகான குறும்புகார பெண்ணாக இந்த படத்தில் மிகவும் நேர்த்தியான ஒரு கதாபாத்திரம் செய்ததை பற்றி தான் சந்திக்கும் பல நண்பர்களிடம் சொல்லி வருகிறார் . மிகவும் இயற்கையான பல லோகேஷன்ஸை இந்த படத்திற்காக தேர்வு செய்து கண்களுக்கு விருந்து அளிக்கும் விதமாக K.V.மணி ஒளிப்பதிவு செய்து உள்ளார் . சாதிய பிரச்சனையை பல படங்கள் சமீபத்தில் தமிழ் சினிமாவில் சொல்லி வருகின்றனர் .ஒரு பக்கம் சலிப்பு தட்டும் அளவுக்கு பல திரைக்கதைகள் உள்ளது. ஆனால் உண்மை சம்பவங்களை மிகவும் எதார்த்தமாக சொல்லும் படங்கள் மிக குறைவே ,அந்த வகையில் "உலகம்மை" பல சொல்லப்படாத விஷயங்களை சொல்லும் என்று இயக்குனர் ஆணித்தனமாக சொல்லுகிறார் . 2021 இறுதிக்குள் இந்த படம் வெளிவர திட்டம் தீட்டி உள்ளனர் பட குழுவினர் .

    English summary
    Director Vijay Prakash is confident that his movie Ulagammai will talk about the unknown facts. The movie has Ilayaraja as the composer.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X