விக்ரம் படத்தோட பிரமோஷன்... மும்பை பறந்த கமல்... விமான நிலைய வீடியோ பகிர்வு!

மும்பை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் விக்ரம். இந்தப் படம் வரும் ஜூன் 3ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கிவிட்டுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவுற்றுள்ள நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நரேன் ஆகியோர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஜூன் 3ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ள படம் விக்ரம். கமல் 4 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றவுள்ளதால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் இந்தப் படத்தின் ரிலீசை கொண்டாட காத்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ரசிகர்கள் மட்டுமின்றி பொது ஆடியன்சும் இந்தப் படத்திற்காக வெயிட்டிங். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்டவர்களின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். இதுமட்டுமில்லாமல், இத்தகைய பெரிய ஹீரோக்களை லோகேஷ் எப்படி சரியாக பயன்படுத்தியுள்ளார் என்ற எதிர்பார்ப்பும் படத்திற்கு எழுந்துள்ளது.

கமலின் தீவிர ரசிகர் லோகேஷ்

கமலின் தீவிர ரசிகர் லோகேஷ்

மேலும் கமலின் தீவிர ரசிகராக லோகேஷ் இருப்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் எகிற காரணமாக அமைந்துள்ளது. படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி அதுவும் தன் பங்கிற்கு படத்தின் எதிர்பார்ப்பை பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு பல விஷயங்கள் இந்தப் படத்தை கொண்டாட காரணமாக அமைந்துள்ளது.

வடஇந்திய திரையரங்க வெளியீட்டு உரிமை

வடஇந்திய திரையரங்க வெளியீட்டு உரிமை

வட இந்தியாவின் திரையரங்க வெளியீட்டு உரிமையை பென் மூவீஸ் கைப்பற்றியுள்ளது. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனலுடன் இணைந்து இதை பென் மூவீஸ் மேற்கொள்ளவுள்ளது. பெரிய தொகை கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனும் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரமோஷனுக்காக மும்பை சென்ற கமல்

பிரமோஷனுக்காக மும்பை சென்ற கமல்

இதனிடையே படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் கமல்ஹாசன் தனது மகள் அக்ஷரா ஹாசனுடன் மும்பை சென்றுள்ளார். அங்கு கபில் ஷர்மாவின் ஷோவில் அவர் விக்ரம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். அவரை மும்பை விமான நிலையத்தில் பார்க்க முடிந்தது.

 விமான நிலைய வீடியோ

விமான நிலைய வீடியோ

இதன் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அவரை இந்த வீடியோவில் பார்ப்பவர்கள் அனைவரும் பான் இந்தியா படத்திற்காக இந்த வயதில் கமல்ஹாசன் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்வது குறித்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X