உலகத்தர இயக்குநருடன் இணைகிறாரா உலகநாயகன்?... அடுத்த ஆண்டில் துவங்கும் சூட்டிங்!

ஐதராபாத் : உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படம் வரும் ஜூலை 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன.

தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார் கமல். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

உலகநாயகனின் விக்ரம் படம்

உலகநாயகனின் விக்ரம் படம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். அவரது முந்தைய படமான விக்ரம் படத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு படங்களிலும் கமல் நடித்துள்ளதே ஒரே வித்தியாசமாக கூறப்பட்டுள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் உருவாகியுள்ளது.

விக்ரம் பட டைட்டில் காரணம்

விக்ரம் பட டைட்டில் காரணம்

முந்தைய விக்ரம் படம் வெளியான 1986ல்தான் லோகேஷ் கனகராஜ் பிறந்தாராம். அதுவும் இந்த டைட்டிலை அவர் தேர்வு செய்ய காரணமாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 4 ஆண்டுகளுக்கு பின் கமல் திரையில் தோன்றுவதும் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கமலின் எனர்ஜி

கமலின் எனர்ஜி

படத்தின் ட்ரெயிலர், டீசர் மற்றும் பாடல்களில் கமலின் எனர்ஜி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மூத்த நடிகர் என்ற எண்ணத்தை இதன்மூலம் கமல் முறியடித்துள்ளார். குறிப்பாக படத்தின் முதல் பாடல் வெளியான நிலையில், அதில் கமலின் எனர்ஜி வேறு லெவலில் காணப்படுகிறது.

கமல் அடுத்தடுத்த தயாரிப்பு

கமல் அடுத்தடுத்த தயாரிப்பு

படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை தயாரிக்கவும் நடிக்கவும் கமல் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை கமல் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரஷாந்த் நீலுடன் இணையும் கமல்?

பிரஷாந்த் நீலுடன் இணையும் கமல்?

இதனிடையே கேஜிஎப் படங்களை கொடுத்து சர்வதேச அளவில் மிகுந்த சிறப்பான இயக்குநராக மாறியுள்ள பிரஷாந்த் நீல் படத்தில் கமல்ஹாசன் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரஷாந்த் நீல்.

ஏப்ரல் 2023ல் அடுத்தப்படம்

ஏப்ரல் 2023ல் அடுத்தப்படம்

இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டின் இறுதியில் நிறைவடையும். தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என்டிஆர்31 படத்தை இயக்கவுள்ளார் பிரஷாந்த் நீல். இந்தப் படத்தின் போஸ்டர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளையொட்டி ரிலீசானது.

கனவு பிராஜக்ட்

கனவு பிராஜக்ட்

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் கதை குறித்த யோசனை தனக்கு தோன்றியதாகவும் ஆனால் இதன் பிரம்மாண்டம் மற்றும் பரிணாமம் தன்னை தடுத்ததாகவும் பிரஷாந்த் நீல் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தன்னுடைய கனவு பிராஜக்ட் கனவு நாயகனுடன் உருவாவது சிறப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கமல்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கமல்

இந்தப் படத்தை பான் இந்தியா படமாக தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க கமல்ஹாசனிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கதை பிடித்துப் போய் அவரும் ஓகே சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை படக்குழு விரைவில் உறுதிப்படுத்தும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X