Indian 2: ஸ்ருதி மனசு வெச்சா நான் இப்போவே தாத்தா தான்.. கமல் கலகலப்பேச்சு!

சென்னை: லைகா நிறுவனம் தயாரிக்க, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று படு கோலாகலமாக நடைபெற்றது. இதில் கருப்பு நிறத்தில் குர்தா அணிந்து கொண்டு செம மாஸாக பேசி இருந்தார் கமல், அவரின் பேச்சு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்டு, சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

Kamal Haasan indian 2 audio launch 2

கமல்ஹாசன் பேச்சு: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பொதுவாக இரண்டாம் பாகம் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஏனென்றால் படத்தில் என்ன எதிர்பார்த்து வரவேண்டும் என்று மக்களுக்கு தெரியும். இந்த படத்துக்கு நடுவுல எக்கச்சக்க சோதனைகள் இருந்தது. அதை எல்லாம் கடந்து இன்றைக்க்கு இங்க வந்து நிக்குறதுல எனக்கு மகிழ்ச்சி.

நான் தமிழன், நான் இந்தியன் என்பதே எனது அடையாளம். இங்க பிரிச்சு விளையாடலாம்னு யாராவது நினைச்சா அது இந்தியாவில் நடக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர், நாம் எப்போதும் வந்தாரை வாழ வைப்போம். தமிழனுக்கு எப்போது அமைதிகாக்க வேண்டும் என்று தெரியும், எங்கே இருக்க வேண்டும் என்று தெரியும் என கமல் பேசியுள்ளார்.

சாப்பாடு இல்லாமல் இருந்து இருக்கேன்: இதைத்தொடர்ந்த தொகுப்பாளர் நடிகர் சிவா, காந்தி தாத்தாவை கேள்வி பட்டு இருக்கிறோம், இந்தியன் தாத்தாவை பார்த்து இருக்கிறோம். இன்றைக்கு இந்தியன் தாத்தா என்ன சொல்ல போகிறார் என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கமல், ஸ்ருதி மனசு வைத்து இருந்தால் நான் இப்போதே தாத்தா தான் என்றார். இதைத் தொடர்ந்து இந்தியன் தாத்தா மேக்கப்போடும் போது, சாப்பிட முடியாது, தண்ணீர் கொடுக்க முடியாது இந்த எனர்ஜி எப்படி வந்தது என்று கேட்க, வேஷமே கிடைக்காமல் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்து இருக்கிறேன். அது மனசில் அப்படியே இருக்கு, இதனால் கிடைச்ச வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்கிற தெறி இப்போதும் என்னிடம் இருக்கிறது என்றார்.

Kamal Haasan indian 2 audio launch 2

இந்த காலத்து இந்தியன் தாத்தா: இந்த விழா தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்த படத்தில், முதன்முறையாக அனிருத்துடன் இணைந்து பணியாற்றுகிறேன். இப்படத்தில் 6 பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்து இருக்கு, இன்றைய காலக்கட்டத்தில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் படம் என்றார்.

இந்தியன் முதல் பாகம்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் ஈட்டியது. இந்தப் படத்தில் சேனாபதி, சந்த்ரூ என இருவேறு கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். தன்னுடைய மகனாகவே இருந்தாலும் லஞ்சம் வாங்கினால் அவன் தண்டிக்கப்பட வேண்டியவன்தான் என்பதை மையமாக கொண்டு இந்தப் படம் உருவானது. கமலின் மேக்கப், மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல இரண்டாவது பாகத்திலும் இந்தக் கேரக்டருக்காக அதன் மேக்கப்பிற்காக கமல் மிகவும் மெனக்கெட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X