நான் நடிகனானதை நம்ப முடியவில்லை... ஆச்சர்யமாக உள்ளது... என்ன கமல் இப்படி சொல்லிட்டாரு!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெயிலர் வெளியீடு இன்று மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் நடிகர் ஐசரி வேலன் சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்று பேசினார்.
Recommended Video

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் பல வருடங்களாக சிறப்பான நடிப்பின்மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். நடிக்க வருவதற்கு முன்னதாக இவர் நடன இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து பாலசந்தர் இயக்கத்தில் படங்களில் நடிக்க துவங்கிய இவர் தன்னை சிறப்பாக மெருகேற்றிக் கொண்டார்.

கதைக்கு முக்கியத்துவம்
காதல் இளவரசன் என்ற பெயரை இவருக்கு ரசிகர்கள் கொடுத்தனர். அந்த அளவிற்கு சிறப்பான பல கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார். கமர்ஷியலாகவும் பல ஹிட்களை கொடுத்தவர். தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நாயகன் போன்ற படங்களிலும் சிறப்பாக நடித்துள்ளார்.

கமல் என்றால் நடிப்பு
தன்னிடம் கொடுக்கப்படும் சாதாரண கேரக்டரையும் தன்னுடைய நடிப்பால் சிறப்பாக்கி விடுவார் கமல். ஒரு காலக்கட்டத்தில் ரஜினிகாந்த் என்றால் ஸ்டைல், கமல் என்றால் நடிப்பு என்றாகியது. அதை தொடர்ந்து தற்போதுவரை மெயின்டெயின் செய்து வருகிறார் உலகநாயகன். இவரின் பல படங்களில் இவரது நடிப்பு உலகத்தரத்திற்கு இருந்தது இவரது ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது.

மன்னிப்பு கேட்ட கமல்
இந்நிலையில் நேற்றைய தினம் ஐசரி வேலன் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். நிகழ்ச்சியில் அவர் சிறிது நேரமே இருந்தார். விக்ரம் படத்தின் சென்சார் நடைபெற்று வருவதாகவும் அதற்காக தான் போக வேண்டியிருப்பதால் நிகழ்ச்சியில் இருந்து விரைவில் செல்வதாக அவர் மேடையில் மன்னிப்பும் கேட்டார்.

ஐசரி வேலன் குறித்த பாராட்டு
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அவர் ஐசரி வேலன், நல்ல நிலையில் இருந்தபோதும்கூட சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னுடைய நடிப்பு ஆசையை தீர்த்துக் கொண்டதாக பாராட்டினார். மேலும் ஐசரி கணேஷ் போன்ற சிறப்பான மகனை தந்துள்ளதாகவும் அவர் ஐசரி வேலனின் மனைவிக்கு பாராட்டு தெரிவித்தார்.

மனதளவில் டான்ஸ் மாஸ்டர்
தொடர்ந்து பேசிய அவர், தற்போது சிலை திறக்கப்படும் இடம் முன்னதாக சூட்டிங் அரங்கமாக இருந்தபோது எம்ஜிஆரின் சங்கே முழங்கு, நான் ஏன் பிறந்தேன் போன்ற படங்களின் பாடல்களின் சூட்டிங் நடைபெற்றதாகவும் தான் அப்போது துணை டான்ஸ் மாஸ்டராக இருந்ததாகவும் குறிப்பிட்டார். தற்போதும் மனதளவில் தான் அப்படித்தான் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகனானதை நம்ப முடியவில்லை
இடையில் போஸ்டர் எல்லாம் போட்டு சிறந்த நடிகன் என்று மற்றவர்கள் கூறுவதாகவும் கமல் கூறினார். தன்னால் இதை நம்பமுடியவில்லை என்றும் ஆனால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து பார்க்கும்போது இவ்வளவு தூரம் தான் வந்தது தனக்கு ஆச்சர்யத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.
நடிப்புக்கு இலக்கணம் என்று பலரின் பாராட்டை பெற்றவர் கமல்ஹாசன். அவர் தன்னால் நடிகனானதை நம்ப முடியவில்லை என்று கூறியதை பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும் நடிகனானது ஆச்சர்யத்தை அளிப்பதாகவும் அவர் வெளிப்படையாக பேசி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











