நான் கோடு போட்டேன்... லோகேஷ் ரோடு போட்டார்... சூர்யா கேரக்டர் குறித்து மனம்திறந்த கமல்!

சென்னை : உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது விக்ரம் படம்.

இந்தப் படம் கமலின் முந்தைய படமான விக்ரம் என்ற படத்தின் தலைப்பிலேயே தற்போது உருவாகியுள்ளது.

படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

கமலின் விக்ரம் படம்

கமலின் விக்ரம் படம்

உலகநாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகவுள்ள விக்ரம். வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் இந்தப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தின் ட்ரெயிலர், டீசர், போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

எனர்ஜியான கமல்ஹாசன்

எனர்ஜியான கமல்ஹாசன்

குறிப்பாக அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் படத்தின் இசை மற்றுட் ட்ரெயிலர் வெளியானது. படத்தின் ஒரு பாடலின் லிரிக் வீடியோக முன்னதாக வெளியான நிலையில், அதில் தன்னுடைய சிறப்பான எனர்ஜியை ரசிகர்கள் பரிசாக கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.

பவர்புல் கேரக்டரில் சூர்யா

பவர்புல் கேரக்டரில் சூர்யா

படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என கமல்ஹாசனுக்கு அதிகமான வில்லன்கள் காணப்படுகின்றனர். இந்நிலையில் படத்தில் புதிய இணைப்பாக நடிகர் சூர்யாவும் பவர்புல்லான கேமியோ ரோலில் படத்தில் இணைந்துள்ளார். படத்தில் அவர் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் நடித்துள்ளதாக ஆடியோ ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சூர்யா கேரக்டர் குறித்து கோடிட்ட கமல்

சூர்யா கேரக்டர் குறித்து கோடிட்ட கமல்

இந்தக் கேரக்டரை சூர்யாவிடம் கூறியவுடன் உடனடியாக தனக்கு கால்ஷீட் கொடுத்ததாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதனிடையே படத்தில் இந்தக் கேரக்டர் குறித்து தான் இயக்குநர் லோகேஷிடம் கோடிட்டு காட்டியதாக கமல்ஹாசன் தற்போது தெரிவித்துள்ளார்.

டெவலப் செய்த லோகேஷ்

டெவலப் செய்த லோகேஷ்

தான் இந்தக் கேரக்டர் குறித்து கூறியவுடனேயே தன்னை அங்கேயே ஸ்டாப் செய்த லோகேஷ் கனகராஜ், இது சிறப்பான ஐடியாவாக இருக்கிறது என்று கூறி, அந்தக் கேரக்டரை தன்னுடைய ஸ்டைலில் சிறப்பாக டெவலப் செய்து வந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கசிந்த சூர்யா கேரக்டர்

கசிந்த சூர்யா கேரக்டர்

சூர்யா கேரக்டரை ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைசாக கொடுப்பதற்காகவே தங்களது டீம் முயற்சி செய்ததாகவும், ஆனால் அந்த கேரக்டர் ரசிகர்களிடம் வெளிப்பட்டு விட்டதால் அதை தாங்களும் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும் ஆனால் படத்தில் சூர்யாவின் கேரக்டர் மிகப்பெரிய சர்ப்பிரைசாக ரசிகர்களுக்கு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சூர்யா மாஸ் என்ட்ரி

சூர்யா மாஸ் என்ட்ரி

கடைசி நேரத்தில் சூர்யாவின் மாஸ் என்ட்ரி இருக்கும் என்றும் அது விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கான வழியாகவும் காணப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சூர்யாவின் கேரக்டர் குறித்த ரசிகர் ஒருவரின் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கமலும் சூர்யாவின் கேரக்டர் குறித்து பேசியுள்ளது படத்தில் அவரது கேரக்டரை மேலும் எதிர்பார்க்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X